தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Tuesday, July 14, 2009

பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.


பெரியாருக்கு வ.உ.சி. எழுதிய கடிதம்.

V.O.Chidambaram பிள்ளாய் KOILPATTI,S.I.R.

PLEADER 6-6-28


அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம். சேமத்துக்குக் கோருகிறேன்.

நாகப்பட்டணத்திலும்,கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோசத்தை உண்டு பண்ணியது. ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா? ஆம் என்றால் நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும். என் மகன் school final examinationல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்கவைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டு மெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Inspector ஆகலாம் சாதாரண சிபார்சு இருந்தால் முதலில் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப்பற்றி எனக்குத் தெரிவியுங்கள். கடவுள் துணை.

அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்


(தேச விடுதலைக்காக பாடு பட்ட ஒரு மாபெரும் தலைவரின் இக்கடிதம் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து கப்பல் வாங்கிய வ.உ.சி.யால் மகனை பள்ளி இறுதி வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க இயலாமல் போனதும், வேலைக்கு சரியான பரிந்துரை கிடைக்குமா என தயங்கிய படி பெரியாரிடம் கேட்டிருப்பதும் இன்று நடக்குமா? கடவுள் இல்லை, கடவுளை மற மனிதனை நினை என்று கூறிய பெரியாருக்கு எழுதிய கடிதத்திலேயே கடவுள் துணை என்று எழுதிய வ.உ.சி. எவ்வளவு வெளிப்படையான மனிதர் பாருங்கள்.)

4 comments:

  1. நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில், பெரியார் தன்னுடைய இறைமறுப்புக் கொள்கையில் தெளிவாக இல்லை. சராசரி இந்தியனைப் போலவே, இறைவனின் கருணையை வேண்டியும், பிரார்த்திக் கொள்வதுமான எழுத்துக்களே, இருக்கின்றன. அவர் தீவீரமான நாத்திகராக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள ஆரம்பித்தது 1937 வாக்கில் தான். இந்துமதத்தை மட்டுமே எதிர்ப்பது, தூஷிப்பது என்ற நிலையில் இருந்து படிப்படியாக உயர்ந்து, பார்ப்பனீயத்தை மட்டுமே எதிர்ப்பது என்று ஆரம்பித்தது அதற்கும் பத்து ஆண்டுகளுக்குப் பின்னால் தான்.
    இந்த சுட்டி உங்களுக்கு அதிகத் தகவல்களைத் தரக் கூடும்:
    http://www.tamilhindu.com/2009/07/periyar_marubakkam_part06/

    ReplyDelete
  2. நெஞ்சம் வலிக்கிறது அய்யா! நாட்டின் விடுதலைக்காக தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த வ.உ.சிபோல் இனியாங்கனும் காணோம்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு. ஒளிநகல் எடுத்த புத்தகப் பெயரையும் சேர்த்துவிடுங்கள். பின்னால் ஆய்வர்களுக்கு அப்படியான நூல்களைத் தேட ஊக்குவிக்கும்.

    ஆ. இரா. வெங்கடாசலபதி வெளியிட்ட வ.உ.சி கடிதங்கள் புத்தகத்தில் இருந்தா?

    அன்புடன்,
    நா. கணேசன்

    ReplyDelete