தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 20, 2023

தொலைவுச் சவால் 2023


***
சென்னை சைக்கிள் குழுவினரின் தொலைவு சவாலில் பங்கேற்பதற்காக மருத்துவர் பார்த்திபன் அழைப்பு விடுத்தார். அப்போதுதான் இப்படி ஒரு குழு (WCCG) இருப்பது எனக்கு தெரியவந்தது. விதிமுறைகளைக் கேட்ட போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருந்தது. ஐந்து பேர் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்ட வேண்டும். அப்படி எனில் ஒருவர் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் தான் சரியாக இருக்கும். என்னால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டர் ஓட்ட முடியாது என்று கூறி மறுத்து விட்டேன். நீங்கள் 500 கிலோ மீட்டர் ஓட்டினால் போதும் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து 4500 கிலோமீட்டர் ஓட்டிக் கொள்கிறோம், ஒரு குழுவுக்கு ஐந்து பேர் தேவை நான்கு பேர் தயாராக இருக்கிறோம் ஐந்தாவதாக நீங்களும் இணைந்தால் பதிவு செய்யலாம் என்றார். (மருத்துவர் நவீன், மருத்துவர் விஜய், திரு. சுதாகர் ஆகியோர் இக்குழுவில் உள்ளதால் நானும் சம்மதித்தேன். நவீன் சுதாகர் இருவரும் சைக்கிள் பேய்கள் 100 கி.மீ.க்கு குறைவாக ஓட்டுவதே இல்லை சுதாகர் சார் 600 கி.மீ. பி.ஆர்.எம். செல்கிறார் எனவே இந்த சவாலை எளிதாக எதிர்கொள்ளலாம் என்று ஆசையைத் தூண்டினார்) பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் இன்று மாலை ஆறு மணியுடன் கால அவகாசம் முடிவடைகிறது என்றார். அந்த நேரத்தில் எனது கைபேசி முடங்கிப் போனது. மருத்துவர் விஜயோ துபாய் விமான நிலையத்தில் இருக்கிறார். அவருக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு என்னை அழைத்து சலித்து எங்கள் வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போது தான் என் கைபேசிக்கு உயிர் வந்தது. மணியோ ஏழு ஆகியிருந்தது. பதிவு செய்வதற்காக காலக்கெடு முடிந்து விட்டது. எங்களுக்காக மருத்துவர் நவீன் சென்னையில் பேசி கால அவகாசத்தை நீட்டிக்கச் செய்திருந்தார். என்னால் இணைய வழியில் தொகையை செலுத்த இயலவில்லை எனவே பார்த்திபன் எனக்காக தொகையை செலுத்தினார். இப்படியாக அந்த சவாலில் பதிவு செய்வது மிக பெரிய சாவலாக இருந்தது எங்களுக்கு.
ஒரு வழியாக டாக்டர்ஸ் ஸ்ட்ரேஞ்ச் குழு டைட்டன்ஸ் சவாலில் இணைக்கப்பட்டது.
24 நாட்களில் 2868 கி.மீ. தான் ஓட்டினோம் இன்னும் ஆறு நாட்களில் 2132 கி.மீ. ஓட்ட வேண்டும். மாதம் முடிந்தது வாட்சப் குழுவில் நாங்கள் ஓட்டிய தூரத்தை மருத்துவர் விஜய் இப்படி பதிவுசெய்தார்.
Vijay 1066
Parthiban sir. 1002
Sudhakar sir 782
Rathna pugazh sir. 705
Naveen sir 669
Total 4225 / 5000
ஒரு மாதம் முடிந்தது நாங்கள் நினைத்தபடி சவாலை முடிக்க இயலவில்லை. இருந்தாலும் 4000 கி.மீ.க்கு மேல் ஓட்டியதால் டைட்டன்ஸ் க்கு பதில் வைக்கிங் வகையில் நாம் வருவோம் என்று ஆறுதல் கூறினார் பார்த்திபன். ஒரு வழியாக சென்னையிலிருந்து எங்கள் குழுவினருக்கான மெடல் களை பெற்றோம். இன்று குழுவினர் அனைவரும் வடலூரில் சந்தித்து பதக்கங்களை பகிர்ந்து கொண்டோம். மருத்துவர் நவீன் புதுவையில் இருந்தும் திரு. சுதாகர் கடலூரில் இருந்தும் மிதிவண்டியில்தான் வந்தனர் நாங்கள் மூவரும் வடலூர் சென்றோம். மீண்டும் அவர்களை விருத்தாசலம் அழைத்து வந்து காலை சிற்றுண்டியை முடித்து அவரவர் இல்லம் திரும்பினோம்.
PC: Dr. Navin , Dr. Parthiban Allimuthu
See Insights
Boost a Post
All reactions:
Pa U Thendral, Thanga Velmurugan and 106 others

மீண்டும் மிதிவண்டி


***
கீரனூர், கருவேப்பிலங்குறிச்சி, பள்ளிகளில் படித்த போது மிதிவண்டியில்தான் தினசரி செல்வோம். பேருந்து வராத நாட்களில் விருத்தாசலம் பள்ளிக்கும் மிதிவண்டியில் சென்றதுண்டு. தொழூர் பள்ளியில் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றேன்.
மோட்டார் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய பிறகு சைக்கிள் துருப்பிடித்துப் போனது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கி பல சவால்களில் பங்கேற்று வெற்றி பெற்றது ஊக்கம் அளித்து வருகிறது. "நாங்கள் சென்னை மிதிவண்டி குழுவில்" ( WCCG -  We are Chennai Cycling group) இணைந்து இரண்டு சவால்களில் கலந்து கொண்டோம். இதற்கு தூண்டியவர்கள் மருத்துவர்கள் நவீன், பார்த்திபன், விஜய் மற்றும் திரு. சுதாகர். ஐந்து பேரும் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கி.மீ. ஓட்ட வேண்டும். மற்றொரு சவால், பணி நிமித்தம் வெளியில் செல்லும்போது சைக்கிளில் செல்ல வேண்டும். கடைக்கோ நண்பர்களை சந்திக்கவோ அலுவலகத்திற்கோ செல்லும் போது மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக சைக்கிளைப் பயன்படுத்துவது. இது எனக்கு மிகவும் விருப்பமான சவாலாக இருந்தது. வீட்டிலிருந்து கடைகள் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளன. தினம் ஒரு முறையாவது கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கி.மீ. என்றால் ஓராண்டுக்கு 730 கி.மீ. ஓராண்டுக்கு 20 லி. பெட்ரோலை சேமிக்க வாய்ப்பு. எனவே இந்த சவாலில் கலந்துகொண்டு கடைகளுக்கு சைக்கிளில் செல்லத் தொடங்கியுள்ளேன். இதனைப் பாராட்டி சென்னை குழுவினரின் அன்பளிப்பு அழகான டி-சர்ட் மற்றும் நினைவுப் பரிசு. இவற்றை பொறுப்பாக அனுப்பி வைத்த சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நன்றி.
மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்குவோம் நம்மால் இயன்ற வரை சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
நன்றி:WCCG
Pc:Dr.G.Sundaraselvan
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, Thiyaga Sekar and 79 others