தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, June 16, 2012

தமிழனின் ஊர்ப்பெயர் தமிழில் வேண்டும்



விருத்தாசலம் என்னும் வட மொழிப் பெயரை தமிழில் திருமுதுகுன்றம் என்று மாற்றுவதற்காக 20 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். இப்போது நல்ல சூழல் நிலவுகிறது. கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் ஆர்வமாக உள்ளனர். அதுகுறித்த வரலாறுகளை காணுங்கள்.


15.12.1993 விடுதலை தலையங்கம்
 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு அரசுக்கு அனுப்பிய கடிதம்

 திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டம்
தமிழக அரசு நடுவணரசுக்கு அனுப்பிய கடிதம்
நடுவணரசு எழுத்தாளர் கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்
தமிழக அரசு கூட்டமைப்புக்கு வழங்கிய தகவல்

 அகநானூற்றில் முதுகுன்றம் என குறிப்பிடும் மாமூலனார் பாடல்
பழமலைநாதர் கோயில் கல்வெட்டு

பழமையான இவ்வூரின் பெயரை மீண்டும் திருமுதுகுன்றம் என மாற்றவேண்டும்.


8 comments:

  1. நல்ல முயற்சி,ஏன் மக்கள் பிரதிநிதிகள் இதற்கு குரல் கொடுக்க கூடாது?

    ஓட்டுக்கேட்டு வரும் போதே ,இக்கோரிக்கையை வைத்து இருக்கலாம், அல்லது அப்போ தலையாட்டிவிட்டு இப்போ ஏமாற்றுகிறார்களா?

    ------

    மருங்கூர்னு பண்ருட்டி பக்கம் ஒரு ஊர் இருக்கு அங்கு ஒரு முறை போய் இருக்கேன். ,விருத்தாசலம் பக்கமும் ஒன்று இருக்கா அப்போ?

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வென்றிட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. vetrikitta vaazhththukkal thamizhagaththil ulla anaiththu oor peyarum thooya thamizhil irukka vendum nandri
    surendranath1973@gmail.com
    kurippu : ennada ivan oorellaam thamizhil vaikka solli than peyarai samaskrudaththil vaiththirukkidraane ena enna vendaam enakku enadhu thandhai chellamaga itta peyar ennudaiya inathalaththin mugavari www.aavirai.com oru murai sendru vaarum

    ReplyDelete
  4. நம் நாட்டில் தமிழ் பெயர் என்பது ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டாக்கு கிறது.
    ஷ்யாம் ,ஸ்வேதா என்று பெருமைப்படும் பொழுது கருப்பணன்,வெள்ளையன் என்ற பெயர்
    சொல்ல கூசுகிறோம்.நவரத்தினம்,ரத்தினம் என்பது ரத்ன.பொற்கொடி,ஸ்வர்ணலதா .
    பல முக்கிய பணிகளை விட்டுவிட்டு தமிழ் பெயர் என்று மொழியை அழிக்காதீர்கள்.
    கருணாநிதி,தயாநிதி உதயநிதி,உதயசூரியன்,பட்டிதொட்டி எல்லாம் ஆங்கிலக் கல்வி.மம்மி டாடி.வீண்வாதம்.
    பயனுள்ள பனி பல.ஊருக்கு உபதேசம்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மீண்டும் “பழமலை” ஆகட்டும் ‘விருத்தாச்சலம்’

    வடமொழி மோகத்தால் தொன்மையான ‘பழமழை’ ‘விருத்தாச்சலம்’-ஆகிப் போனது. “முதுகுன்றம்” என்பதும் ‘கிழமலை’ என்றே பொருள்படும். தொன்மையான, என்றும் நிலைத்துள்ள என்று பொருள்படும் ‘பழமலை’ என்ற பெயரே சிறப்பாகும்; ‘விருத்தாசலம்’ என்பது சிறப்பன்று. அங்ஙனம் கூறின் அது என்று ஆகும். உண்மையான பெயர் "பழமலை". அங்கு குடிகொண்டுள்ள இறைவன் பெயர் பழமலைநாதர். இதைவிடக் கொடுமையானது, என்றும் இளமையான சிவபெருமானின் ‘பழமலைநாதர்’ என்னும் பெயரையும் ‘வயதான கிழவன்’ என்று பொருள்படும் ‘விருத்தகிரீஸ்வரர்’ என்றும், பெரியநாயகி அம்மையை ‘வயதான கிழவி’ என்று பொருள்படும் ‘விருத்தாம்பிகை’ என்றும் மாற்றியுள்ளதாகும். சொல்லின் பொருளறிந்து “பழமலை”யையும், “பழமலைஈசனை”யும் போற்றுவோம்.

    ReplyDelete
  7. மீண்டும் “பழமலை” ஆகட்டும் ‘விருத்தாச்சலம்’

    வடமொழி மோகத்தால் தொன்மையான ‘பழமலை’ ‘விருத்தாச்சலம்’-ஆகிப் போனது. “முதுகுன்றம்” என்பதும் ‘கிழமலை’ என்றே பொருள்படும். தொன்மையான, என்றும் நிலைத்துள்ள என்று பொருள்படும் ‘பழமலை’ என்ற பெயரே சிறப்பாகும்; உண்மையான பெயர் "பழமலை"யே. இதை வள்ளலாரின் திருவருட்பாவும் கூறுகின்றது. அங்கு குடிகொண்டுள்ள இறைவன் பெயர் பழமலைநாதர். இதைவிடக் கொடுமையானது, என்றும் இளமையான சிவபெருமானின் ‘பழமலைநாதர்’ என்னும் பெயரையும் ‘வயதான கிழவன்’ என்று பொருள்படும் ‘விருத்தகிரீஸ்வரர்’ என்றும், பெரியநாயகி அம்மையை ‘வயதான கிழவி’ என்று பொருள்படும் ‘விருத்தாம்பிகை’ என்றும் மாற்றியுள்ளதாகும். சொல்லின் பொருளறிந்து “பழமலை”யையும், “பழமலைஈசனை”யும் போற்றுவோம்.

    ReplyDelete