தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Friday, November 27, 2009

இலக்கிய மன்றத் தொடக்க விழாவிருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கியமன்றத் தொடக்க விழா 27-11-2009 அன்று மாலை நடைபெற்றது. கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி இலக்கிய மன்னத்தைத் தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பள்ளிக்கு சுற்றுச் சுவர் கட்டுவதற்காக தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உருவா 10 இலட்சம் வழங்குவதாக அறிவித்தார்.
மாணவர்களின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியை தமிழாசிரியர் கலையரசி ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்த்தினார் தேசியமாணவர்படை,நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் பாதுகாப்பு வரவேற்புப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். கல்விக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் பிரகாசம் வரவேற்க உதவி தலைமை ஆசிரியர்கள் குமுதம், வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கென்னடி,மாப்பிள்ளை மொய்தீன், நீதிராஜன்,கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலக்கியமன்ற செயலராகிய நான் நன்றி கூற விழா நிறைவுற்றது.

No comments:

Post a Comment