பூமிக்குள் புதைக்கப்பட்ட
நம் மூதாதையர்
ஒருவரைப் போல்
காட்சியளிக்கிறது
மண்ணுக்குள்ளிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட
சக்கரைவள்ளிக்கிழங்கு
தணலுக்குள்
நுழைத்து வைத்து
மறுநாள்
எடுத்துப் பார்க்கிறேன்
வெந்து சுருங்கிய உடலை
என் கோரைப் பற்கள்
நீண்டு வெளிவர
பிய்த்து உண்கிறேன்
எனக்கு மிகவும் விருப்பமான
என் மூதாதையரின்
வெந்த பிணத்தை.
mikavum arumaiyaana kavidhai sir ! ungalin varigalil migavum pudhu paaniyaka indha kavidhai irukkiradhu. arumai..... arumai...... arumai.....
ReplyDeleteஆழமான வித்தியாசமான சிந்தனை
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அற்புதமான வரிகள் சிந்தனை சிறப்பு .
ReplyDeleteகருத்துள்ள கவிதை !
ReplyDeleteவியக்க வைத்த கவியாக்கம் முனைவரே.
ReplyDeleteஎன்ன செய்ய? நம் வாரிசுகளுக்கு தான் ‘இப்பிணங்களை’ தின்னு வளரும் பாக்கியம் கிட்டாமல் ‘பிஸ்ஸா’ ‘பர்கர்’ ஊட்டி வளர்க்கிறோம்.
பின்னூட்டமிட்ட முருகன்,வலையகம், திரு ரமணி, சகோ.சசிகலா,திண்டுக்கல் தனபாலன், சத்ரியன் ஆகியோருக்கு நன்றிகள் பல...
ReplyDeleteகிழங்கு கெடைக்காத ஊரில எச்சில் ஊற வைச்சிட்டிங்க...எழுத எத்தனையோ உள்ளது...முடிந்தால் நம்ம வலைபூக்கும் வந்து போங்க...http://tamilmottu.blogspot.in/
ReplyDelete