தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Saturday, May 30, 2015

நம்ப முடியாத கதை


                                                                        
           
            ஆதியும் பாரதியும் அக்கா தங்கச்சிங்க. பெரியவ ஒம்பதாவது சின்னவ ஆறாவது படிக்கிறாங்க. இவங்க ரெண்டுபேருக்காகத்தான் குடும்பம் நகரத்துக்கு வந்தது. அப்பாவுக்கு தன்னோட பொண்ணுங்கள இந்த நகரத்துலயே பெரிய பள்ளியில சேக்கணும்னு ஆச. அப்படியே செஞ்சாரு. ஆனா அடுத்த ஆண்டே அதவிட பெரிசா ஒரு பள்ளி உருவாச்சு. விடுவாரா? அந்த பள்ளிக்கு மாத்துனாரு பிள்ளைங்கள.
            புது பள்ளியில புத்தகத்துக்கு பதிலா ஒரு டேப் மட்டுந்தான். அதனாலயே இந்த பள்ளியில அதிக பேரு சேந்தாங்க. ஆதியும் பாரதியும் எந்த நேரமும் டேபும் கையுமாவே இருந்தாங்க. நல்லாவும் படிச்சாங்க. ஒவ்வொரு பாடமும் ஒரு அனிமேஷன் படமாவும் அந்த டேபுல இருக்கும். அதனால பிள்ளைங்க பாடங்கள ஆர்வமா கத்துகிட்டாங்க.
            அக்கா தங்கச்சி ரெண்டு பேருக்கும் இப்படிப்பட்ட பள்ளியில படிக்கிறதுல பெருமை. சின்னவளுக்கு செல்ஃபி எடுத்துக்குறதல ஆர்வம். அப்பா எங்க கூப்பிட்டுகிட்டு போனாலும் அங்க ஒரு செல்ஃபி எடுத்து அதைப்பற்றிய குறிப்புகளோட தன்னோட வலைப்பூவுல பதிவு செய்வா.
            அவளோட வலைப்பூவ தமிழ்மணத்துல இணைச்சிருக்கா. அதனால அவளோட வலைப்பூவை பல நாட்டவர் பார்வையிட்டுள்ளனர். அன்றாடம் அவளுக்கு அதுவே ஊக்கமா இருக்கும்.  எந்த நாட்டிலிருந்தெல்லாம் வருகை தந்துள்ளனர் என்று தினமும் பார்த்து மகிழ்ச்சியடைவாள்.
            ஒருநாள் குடும்பத்தோடு கோயிலுக்கு சென்றனர். பாரதிக்கு கோயிலுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் ஒரு சிலை முன் செல்ஃபி எடுப்பது பழக்கமாகி விட்டது. இந்த முறை எடுப்பதற்கு ஒரு சிலையும் மிச்சமில்லை. கண்ணில் பட்டது  கோயில் யானை. விடுவாளா அப்பாவிடமிருந்து கைபேசியைப் பிடுங்கிக்கொண்டு ஓடினாள் யானையை நோக்கி. முதலில் கையிலிருந்த ஒரு ரூபாயை யானைக்கு நீட்டினாள். அது வாங்கிக்கொண்டதும் செல்ஃபிக்காக கைபேசியை நீட்டினாள். யானை அதையும் லபக்கென வாங்கிக்கொண்டது. அய்யைய்யோ என்று அவள் கத்திக்கொண்டு யானையிடமிருந்து கைபேசியை பிடுங்கிவிட கையை துதிக்கையை நோக்கி நீட்டுவதற்குள் கைபேசி மாயமானது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை உடனே ஓடிவந்தார் அப்பா. கையை துதிக்கைக்குள் விட்டுப் பார்த்தார். ம்ஹூம். யானைப்பாகனிடம் முறையிட அவனும் முயற்சித்துப் பார்த்தான் ஒன்றும் ஆகவில்லை. செய்வதறியாது விழித்தனர்.
 ”சார் ஒன்னும் கவலைப் படாதீங்க நாளைக்கு காலையில வாங்க யானை விட்ட போடும்போது ஒங்க போன் வந்துரும்”
பாகன் கூறிய தீர்வு இவர்களுக்கு நம்பும்படியாக இல்லை. விழித்தபடியே நின்றுகொண்டிருந்தனர்.
”நம்புங்க சார் போன வாரம் இதுமாதிரி ஒரு போன் வாய்க்குள்ள போயி மறுநாள் வெளியில வந்துது”, என்று கூறியதும் கொஞ்சம் நம்பிக்கையோடு சென்றனர். ஆனாலும் அப்பா மகளை ஒரு வார்த்தைகூட கடிந்துகொள்ளவில்லை. மகளுக்குத்தான் மொகம் சோந்து போச்சு. ”அப்பா என்ன மன்னிச்சுடுங்கப்பா. இனிமே இது மாதிரி செய்யமாட்டேன்”.
”நீ என்னடா செய்வ செல்லம். அப்படியே கிடைக்கலன்னாலும் வேற போன் வாங்கிக்கலாம்.”
”அப்போ நான் எடுத்த செல்ஃபி?”
 ”மெமரி கார்டு கூடவா தேராது?” என்று மகளுக்கு ஆதரவாக கேட்டார்.
ஆனாலும் பாரதிக்கு கைபேசி நினைவாகவே இருந்தது. இரவு கனவில் யானையும் கைபேசியும் அவள் எடுத்த செல்ஃபியும் கூடவே யானை விட்டைபோடும் காட்சியும் மாறி மாறி வந்தன.
            காலையில் முதல் வேலையாக அப்பாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனாள். யானை இருக்கும் இடம் நோக்கி விரைந்தனர். அங்கு யானையைக் காணவில்லை. பதறினார்கள் இருவரும். அலுவலகத்தில் விசாரித்தனர். லாயத்திருக்கும் என்று கூறி செல்லும் வழி சொல்ல அங்கு சென்றனர். பாகன் யானைக்கு தென்னை மட்டைகளை தின்னக்கொடுத்தான். அப்பா யானைப்பாகனைப் பார்த்தார் அவனும் இவரைப்பார்த்தான்.
 ”என்ன சார்?” என்று கேட்டான் நேற்று நடந்த எதுவுமே அவனுக்கு நினைவில் இல்லை என்பதுபோலிருந்தது அவன் கேட்டது.
 ”நீங்கதானே காலையில் வரசொன்னீங்க”
“எதுக்கு வரசொன்னேன்?”
”போனை… யானை….” என்று தயங்கினார் அப்பா.
மகள் கண்களை அகலமாக்கிக் கொண்டு நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் பார்வை யானையின் பின்னாலிருந்தது. திடீரென மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தாள்.
“அப்பா……….” என்று கையை யானையின் பின்னோக்கி நீட்டினாள்.
யனை விட்டை போடத்துவங்கி முடித்தது.  இவர்கள் எதிர் பார்த்ததுபோல் கைபேசி அதிலில்லை.
அப்பா யானைப் பாகனைப் பார்க்க அவருக்கு இப்போதுதான் எல்லாமே நினைவுக்கு வந்தது. ”சார் அந்த விட்டைக்குள்ளதான் இருக்கும்  பாருங்க” என்றார்.
அப்பாவுக்கு கை வைக்க தயக்கம்.
”நீங்க போன் வச்சிருக்கீங்களா?” யானைப்பகனைக் கேட்டார்.
”ஏன் கேக்குறீங்க?”
 ”குடுங்களேன் சொல்றன்” என்றவரிடம் நீட்டினான்.
வாங்கி அப்பா அவர் எண்களை டயல் செய்தார்.
என்ன ஆச்சரியம் விட்டைக்குள்ளிருந்து சிணுங்கியது கைபேசி.
மகள் துள்ளிக்குதித்தாள். யானைப் பாகன் விட்டைக்குள்ளிருந்த கைபேசியை எடுத்து சாணியைத் துடைத்துக்கொடுத்தான்.
அப்பாவுக்கும் மகளுக்கும் நம்பவே முடியல.

உங்களுக்கும்தானே?   

Friday, November 1, 2013

சுழியான் சிறுகதை




               
                உருண்டி வைத்திருந்த சுழியான் உருண்டையை மைதாவில் நனைத்து எண்ணெயில்  போட்டபடி ,”தீவாளிக்காவது தலையில எண்ணெய் தேச்சு குளிக்கக் கூடாதா?” என்றாள்.
இதைக்கேட்ட அவள் கணவனுக்கு அவன் எட்டாவது படிக்கும் போது அவன் ஆசிரியர் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. என் மருமொவ இருக்காள தீவுளிக்கு தீவுளி எண்ண தேச்சு குளிப்பா. என் மொவ இருக்காளே  சனியோ... சனி தான்  எண்ண தேச்சு குளிப்பா.  (அந்த தீவுளிக்கு தீவுளி என்று சொல்லும்போது தீபாவளி வாரம் ஒரு முறை வருவது போலவும் சனியோட சனி என்பது சனிக்கிழமை ஆண்டுக்கு ஒரு முறை வருவது போலவுமிருக்கும்) அவன் சிறு வயது நினைவுகளில் மூழ்கினான்.
அப்பா அதிகாலையிலேயே கீரனூர் செட்டியாரிடம் வாங்கிய நல்லெண்ணெயை தலையில் வழிய வழிய தேய்த்துவிட்டு புலிமார்க் சீயக்காயை டபராவில் கொட்டி வடிகஞ்சியை ஊற்றி களிம்பு போல் குழைத்து வென்னீரை தலையில் ஊற்றி ஒருமுறைக்கு இரு முறை சீயக்காயை நுரை வரும்படி தேய்த்து அலசி விடுவார். தலையோடு உடலும் மனமும் புத்துணர்வாயிருக்கும். (தீபவளியென்றில்லை ஒவ்வொரு சனிக்கிழமையும் எண்ணெய்க் குளியல்தான்)
மகன் , அம்மா  சொலவதைக் காதில் வாங்கிக்கொள்ளாதவனாய் ஷாம்ப்பு சாஷேயை எடுத்துக்கொண்டு குளிக்கக் கிளம்பினான்.
நான் சொல்றது காதுல விழலையா?
ஏம்மா  எதுக்கும்மா எண்ணெய் தேய்க்கணும் ஷாம்ப் போட்டு குளிச்சா என்ன?
அதிகாலை நல்லெண்ணெய் தேய்ச்சு குளிச்சா கங்கையில் குளிச்ச மாதிரி
அப்போ கடலை எண்ணெய் தேச்சு குளிச்சா காவிரியில குளிச்ச மாதிரியா? போம்மா என்று கூறிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் அப்பாவுக்கு மகனின் பகுத்தறிவை எண்ணி மனதுக்குள் மகிழ்ச்சி.
மகன் குளிக்கச்சென்றதும் மீண்டும் இவன் சிறுவனானான். அம்மா  எப்போது எழுவாள் என்று தெரியாது. இவனை அதிகாலை ஐந்து மணிக்கு எழுப்புவார்கள் அப்போது அம்மா சுழியான் செய்துகொண்டிருப்பாள். அவள் செய்யும் சுழியான்  நாவில் நீர் சுரக்கச்செய்யும். படைக்காமல் உண்ணக்கூடாது என்பதால் எப்போது படைப்பார்கள் என்று காத்துக் கொண்டிருப்பான். படைத்து முடித்ததும் புதுசட்டையைக் கூட சட்டைபண்ணாமல் சுழியானை எடுத்து சுவைப்பான். அது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கும் பலகாரம் என்பதால் எல்லோருக்குமே சுழியான் மீது ஒரு ஈர்ப்பு. ஏன் மற்ற நாட்களில் சுழியான் செய்வதில்லை என்பது இன்று வரை புரியாத புதிராய் உளது. வித விதமாய் கொல்லையில் என்ன விளைகிறதோ அதிலிருந்து தின் பண்டங்களை செய்து கொடுப்பாள் அம்மா. கம்பு அவல், சோளப்பொரி, அவிச்ச தட்டைப் பயிர், பச்சைப்பயிர் பால் கொழுக்கட்டை, வறுத்த கொள்ளு, எள்ளுருண்டை என்று செய்யும் அம்மா சுழியானை  ஏன் தீபாவளிக்கு மட்டுமே செய்கிறாள்என எண்ணிக்கொண்டிருந்தவனை  நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் மகன்.
குளித்து தலையை துவட்டியபடி அடுப்பறையில் நுழைந்து சுழியானை எடுத்ததும் அம்மா பதறினாள். அய்யைய்யோ படைக்காம சாபிடக்கூடாதுடா என்று செல்லம் கொஞ்சினாள்.
யாருக்கு படைக்கணும் ? என்று கேட்டதும்
அவளுக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று புரியவில்லை நரகாசுரனுக்கா? கிருஷ்ணனுக்கா? என்று சந்தேகம். பொதுவாக சொல்லிவைப்போம் என்று சாமிக்குதான் என்றாள்.
சாமிக்குதான... அப்ப சரி என்று சுழியானைக்கையிலெடுத்தான்.
என்ன... தம்பி? என்று செல்லமாகக் கடிந்துகொண்டாள்.
ஏம்மா ,”நீதான என் சாமி சாப்புடுப்பான்னுகொஞ்சுவ. அப்ப நாந்தான ஒனக்கு சாமி என்றவன்
இந்த சுழியான் எப்படிம்மா செய்றீங்க?
இனிப்புப் பூரணத்த உள்ள வச்சு மைதாவக் கரைச்சு அதுல பூரணத்த முக்கிஎடுத்து எண்ணெயில போட்டா சுழியான் ரெடி”, என்றாள் உற்சாகமாக. இந்த மைதா மாவு ,உருண்டைய உடையாம கெட்டியா புடிச்சுக்கும்.
இந்த உருண்டையைப் பாத்தா மைதாமவுல சிக்கிகிட்டு முழிக்கிற மாதிரியே இருக்கு. நீ அப்பாகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிற மாதிரி” .
அவளுக்கு திக்கென்று ஆனது நம்ம மகனா இப்படி பேசுகிறான் என்று. சற்று சுதாரித்துக்கொண்டு ருசியா இருக்கா இல்லையா?
இருக்கு.. இருக்கு.. என்று வெளியில் வந்தான்.
பட்டாசு சத்தமும் புகை மூட்டமும் காதையும் மூக்கையும் அடைத்தன.
பட்டாசு வெடிக்கிற பழக்கம் சீனாவுல இருந்து நாம கத்துகிட்டதுன்னு யாரோ சொல்லக் கேட்டதா ஞாபகம். இந்த மக்கள் பழக்கங்கள் என்னும் மைதாவுக்குள் சிக்கிக்கொண்டு விழிக்கிறார்களோ என்று தோன்றியது.

நம் ஊரும் கூந்தன் குளம் போல பட்டாசு சத்தமில்லாமலிருந்தால் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான். நினைக்கவே மகிழ்ச்சியாய் இருந்தது .
அப்படி ஒரு தீபாவளிக்காக மனம் ஏங்கியது.

நன்றி : தமிழ்முரசு தீபாவளி சிறப்பிதழ்





Tuesday, June 11, 2013

கொலைச்சேவல்



'கொலைச்சேவல்' இமையத்தின் மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு. வெவ்வேறு விதமான கதைகளாக இவை தோற்றம் கொண்டிருந்தாலும் நவீன வாழ்க்கையை எதிர்கொள்ளும் கிராமத்துக் கிழவி ஒருத்தியின் மனம் இந்த கதைகளின் இடையே இழையோடுவதை நம்மால் உணரமுடியும்.புலம்பல்களின் கலை வடிவம் என்று இக்கதைகளில் சிலவற்றை நாம் கூறலாம். புலம்பல்கள் சில நேரங்களில் மறைமுகமான சமூக விமர்சனங்களாகவும் செயல்படுவதை இமையத்தின் இந்த கதைகளில் நாம் காணலாம்.

வெளியீடு க்ரியா,http://www.crea.in/

Monday, March 12, 2012

குத்தகை' (சிறுகதை) -


'

பொங்கல் தின சிறப்பு சிறுகதை.


 'களம் புதிது'  தனிச்சுற்று    இதழில் 1996- ஏப்ரல் மாதத்தில் வந்த சிறு கதை. வாசிக்க வாசிக்க கதை கனமாக நமது நெஞ்சில் படிந்து விடுகிறது.  உழைத்த மனிதர்கள் எப்படியெல்லாம் வஞ்சிக்கப் பட்டனர் என்பதை மிக மிக எதார்த்தமாக மண் மனத்துடன் சொல்லி உள்ளார் இரெத்தின புகழேந்தி.  களம் புதிது  ஆசிரியர் குழுவின் தலைமை பொறுப்பும் இவர்தான்.  இக் கதை விருத்தாசலம் பகுதியில் நடைப்பெறுவதாக இருந்தாலும், இதில் கையாண்ட வட்டார வழக்கு சொற்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் மாயவரம் பகுதிகளில்  பேசப்படுபவைதான்.

வட்டார வழக்குச் சொல்லில் வளைந்து நெளிந்து  செல்லும் கதாசிரியர், கதையின் முடிவில் சாதி பெயரை கொண்டு திட்டுவது   ஏனோ...மனதை  நெருடுகிறது....!    








நன்றி!
http://www.tamilanveethi.blogspot.in/2012/01/blog-post_9653.html


                  "ஏ... முத்தம்மா சனி மூலையில போயி அற, மொதல்ல மலப்பில்லாத மளமளன்னு ஆவும் அறப்பு"

சர்ரக்...கெழக்கத்தி அருவா நாலு மொதல ஒரே அறப்பா அறுத்தது.

சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...
சர்ரக்...சர்ரக்...சர்ரக்...சர்ரக்...

"என்னடா மாப்ள, இம்மாங் கஷ்டப்பட்டு கடசீல பொகையான் அடிக்க உட்டுட்ட"

"ஏன்யா அந்த வவுத்தரிச்சல கெளப்புற.  பயிறுதான் வெளுத்து போயி இருக்கேன்னு ஒரு மூட்ட ஊரியாவ கொண்டாந்து போட்டு புட்டான். நல்லா பச்ச பசேர்னு வந்தது. திட்டு திட்டா அடிச்சி கெடாவிட்டது"

ரெண்டாவது வாட்டி போடும்போது, ஊரியா கொஞ்சனா காட்டனும்"

"புதுசா  புட்டமுட்டானாம் அவன் பூ....செல்லரிச்சுதாம்..." முணுமுணுத்தாள் முத்தம்மா.   இதைக் கேட்டதும் உம் என்று ஆனது குள்ளனின் முகம்.

"பொகையான் அடிச்சாலே ஒப்புடி ஆவாது. இதுல கொல்ல வாரம், தண்ணிவாரம் குடுத்து ஒனக்கு என்னா மீற போவுது."

"இதெல்லாம்  கணக்கு பண்ணி பாத்துட்டுதான் அவாளு குத்தவைக்கு உட்டது. சும்மாகிம்மா உடுல."

"குள்ள பய பெரியாண்ட நெலத்த கெரையம் வாங்குனவனாட்டம் பள்ளம் மேடு திருத்தறது என்ன, எருவு அடிக்கறது என்னா..."

ஆளுக்கு ஒன்றை சொல்லி குள்ளனின் வயிற்றெரிச்சலை கிளப்பினார்கள்.

0000


"நன்னானே நானே னன்னே
நானனன்னே நன்னா னனே...
கோத்தா கொடி பவழம்
கோருவைக்கே நப்பவழம்
கோப்பாரு இல்லாமலே- நான்
கொடி பழம் சிந்துறனே (நன்னானே....)"

    முத்தம்ம பாட நடவு சனங்கள் பின் பாட்டுப் பாட வடக்கு வேளி முழுக்க எதிரொலித்தது. பாட்டுக்குத் தாளம் போடுவது போல ச்சளக்...ச்சளக்...ச்சளக்... பயிரை சேற்றில் நட்டனர். சொந்த நடவு என்பதால் நெருக்கி நட்டனர். தார்க்குச்சியை குத்தியது போல குத்திட்டு நின்றது பயிர்.

     " நீங்கள்ளாம் இம்மாம் கத்திருக்கிங்க புள்ள....ம்...எங்க கொல்லன்னா சாச்சி போட்டு  எட்ட  எட்ட  நடுறது.   சொந்த நடுவுன்னதும் அஞ்சி வெரலும் சேத்துல போவுத!"    சத்தம் போட்டான் அந்த வழியா வந்த கொடுமனூராங்க மகன்.

"ஒங்களுக்கு மட்டும் என்னா வேற கையாலயா நட்டோம். பாக்கிறதுக்குதான் அதேமேரி தெரியும். கடசீல ஒங்களுக்குதான் நெல்லா வெளையும்."

"ஆமாம்...ஆமாம்...கவுடு வச்சி வேல செஞ்சிங்கன்னா எல்லாங் கட்டாந்தரையாத்தான் போவும்..."

"இங்க ரெண்டு முடி நாத்து எடுத்துகிட்டு வா மாமோய்...."

"கையால ஆவாத கலவட....என்னாடி இன்னும் பின்னாலயே கெடக்குற?" கிண்டலடித்தப்படி நாற்று முடிகளைக் கொண்டு போனான் குள்ளன். அவனை உள்ளே வைத்து வெளியில் நடவு நட்டுவிட்டனர். இப்படி நட்டுவிட்டால் காசு கொடுத்து விட்டுத்தான் வெளியில் வரவேண்டும்.  கையில் காசு இல்லையென்றாலும் எது அவனிடம் இருக்கிறதோ அதை  பிடிங்கிக் கொள்வார்கள்.  பிறகு காசு கொடுத்துவிட்டு பொருளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

  "என்னா சொன்ன...கலவடையாமில்ல...." சிரித்துக் கொண்டே குள்ளனின் பின் பக்கக் கோவணத்தை அவிழ்த்து விட்டாள் கருப்பாயி.

   பொத்துக் கொண்டு பீரிட்டு அடித்தது சிரிப்பொலி, தொங்கிய கோவணத்தை முன் பக்கம் கெட்டியாக அழுத்தி பிடித்துக் கொண்டு "ச்சீ...கையில காசு இல்ல ...ஊட்ட வந்து தரன் உடுங்களன் மானங்கெட்ட கழுதை வோள..." முண்டாசை அவிழ்த்துக் கொடுத்தான்  ஏசியபடி.

  "ஊட்ட வந்து ஏமாத்தி புட்ட அங்க சுத்தமா அவுத்து உட்டுடுவன்"

இவர்களின் சேட்டைகளுக்கு எரிச்சலடைபவன் போல காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் குள்ளனுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சி. ஆண்டைகளுக்கு கிடைத்த அனுபவம் முதன் முதலாக அவனுக்குக் கிடைத்திருக்கிறது.

  நிலம் குத்தகைக்கு விடுவது தெரிந்து பெரியாண்டை வீட்டின் முன் கூனி குறுகி நின்றான் குள்ளன்.

  "தெக்குத் தெருவானுவோளுக்கு வேலைக்கு போறவன்,  குத்துவைக்கு உடுறாங்கன்னதும் கொழஞ்சிகிட்டு வந்து நிக்கிறதப்பாரு. சும்மாவா சொன்னாங்க கள்ளன நம்புனாலும் குள்ளன நம்பக் கூடாதுன்னு..."  பெரியாண்டையின் பேச்சு ஊசியாய் தைத்தது குள்ளனுக்கு.

  "இல்லிங்க... " தயங்கி, பயந்து, நடுங்கி, பவ்யமாய், வாய்பொத்தி, தலை சொரிந்து, கூனியபடி சொன்னான்.

இந்த ஒணக்க ஓட்டு போடும் போது மட்டும் இருக்கட்டும். மாத்தி கீத்தி போட்டிங்கன்னு தெரிஞ்சிது...." கர்ச்சித்தார்.

   "எம் மூனு புள்ள மேல சத்தியமா நம்பள தவற மாத்தமில்லிங்க...உண்ட ஊட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டாங்க இந்த குள்ளன். "

  நல்ல பேச கத்துகிட்டிங்கடா ...சரி...சரி...அந்த மோட்டு ஓரத்து கொல்லையை நட்டுக்க. "

   "ஏரு...கெராக்கியா இருக்குங்க....நம்ப வண்டி..."

   "வண்டியா...ரேட் தெரியுமில்ல...? நானூத்தி இருவத்தஞ்சி "

     ஆண்ட  நீங்க பார்த்து சொன்னா சரிதான்...."

0000


        "அடியோட அறங்கப்பா... வைக்கலாவுது நாலு தெர ஆவுட்டும்"

"வைக்க மட்டும் எங்கேருந்து ஆவும்ங்குற...கூளாந்தான் ஆவும்".

"வீசும் ஒன்ரை மூட்டையாவது தேறுமா...அநியாயமா இருக்க...." முத்தம்மாவின் வாயை கிண்டினாள் மூக்காயி.

" இந்த குள்ள பயதாண்டி பயிறுக்கு தீம்பா இருந்துட்டான். கொண்டாடி குட்டிச் சாத்தின்னு தாலிய வாங்கிகிட்டு போயி வச்சில்ல ஊரியா வாங்கிகிட்டு வந்து போடுறான். ஆனமுட்டும் சொல்லி பாத்தண்டி ஆயி....கேக்க மாட்டன்னுட்டானே.  ஒரே முட்டா அடிச்சி கொட்டிக்கலாம்னு ஆச....அதான்  ஒன்னுமில்லாம பூடுச்சி..."

  இந்த ஊரியா வாங்க பட்டபாடு குள்ளனுக்குத்தான் தெரியும்.  குறுக்கு ரோட்டுல ஒரு கடையிலியும் இல்லன்னுட்டானுவோ  விருத்தாலத்து ஒடயான் கடையில கேட்டா செட்டியாரு கடையில் இருக்குங்குறான், செட்டிய கேட்டா ஒடையார் கடையில இருக்குங்குறான்.

  "அஞ்சாறு பேரு சேந்துகிட்டு கடகாரங்கிட்ட சண்டைக்கு போயிட்டாங்க.  வேற வழி இல்லாம டோக்கன குடுத்து ஊரியா வாங்க வந்தவங்கள வரிசையில நிக்க வச்சிட்டான். உள்ள போறவங்கள்ட்ட பொட்டாஷ் வாங்குனாதான் ஊரியா தருவேங்குறான்.  அதுவும் மூட்ட எரனூத்தி இருவத்தஞ்சி ரூவாயாம். பில் சீட்டும் குடுக்கல".

 " நூத்தி எழுவது ருவா வித்தப்பயே ரெண்டு மூட்ட வாங்கியிருக்கலாம்.  என்னா பண்றது....கையிலியா வச்சிருக்கோம்....பிச்ச எடுக்குமாம் பெருமாளு அத புடிங்கி திங்குமாம் அனுமாருன்னு.... நூறு அம்பதுன்னு பொருக்கி பொணச்சில்ல வாங்குறதா இருக்கு".

...ம்.... இந்த பயிர கண்ணால பாக்க எம்மாஞ் சிருப்பா சிரிச்சேன்.

 அண்ட வெட்டும்போது கால வெட்டிக்கிட்டு காயத்தோடயே தழ கழிச்சி தூக்க முடியாம தூக்கிகிட்டுவந்து காலாலயே மிரிச்சி காயத்துல சேரு பூந்து பொட சச்சி லோக்கல்ல போயி கெடந்து காயத்த ஆத்திகிட்டு வந்தா கள மண்டிபோயி அத அரிச்சன்.

அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா,,,மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா எ

  அடிச்ச பூச்சி மருந்து கொஞ்சமா நஞ்சமா....மருந்து அடிக்கும் போது சோல கிழிச்சி ரெத்தம் கசயும் அதுல மருந்து பட்டா நெருப்ப வச்சாபல எரியும்.  நாத்தம் வேற கொடல புடுங்கும். ரெண்டு நாள் சென்னு போய் பாத்தா சுருட்டிக்கிட்டு இருக்குற சோலையில புழுவு நெளியுது.  என்னாய்யா மருந்து குடுத்தன்னு கடகாரன கேட்டா முழுங்கி (மூங்கிள்)  மெலாரால சேலைய கிழிச்சிட்டு அடிக்குனுங்குறான்.   இனிமே....புழுவ புடிச்சி மருத்துல போட்டாதான் சாவும்னு சொன்னாலும் சொல்லுவான்.

0000



   கட்டு தூக்கும்போது காத்தாட்டம் லெக்காதான் இருந்தது. செத்த நாழியில களத்துக்கு போயி சேந்தது.  கெடாவடி ஒதரும் போதே கூளான் பறந்தது.

தாளு அடிக்க பெரியாண்ட டிரக்கு வந்தது டயர் வண்டியோட. பின்னாலயே தலையில துண்ட போட்டுகிட்டு பெரியாண்டயும் வந்துட்டாரு.

புளிய மரத்தடியில் நின்னுகிட்டு

"ஓரம் பாரம் கெடக்குற தாள அள்ளி உள்ள போடுங்கடா"
...    ...   ...   ...   ...

"வண்டிய நிறுத்திட்டு, நடுல  முட்டா கெடக்கு பாரு...நெறவி உடு"
...   ...     ...   ...  

"ம்....போதும் நிறுத்து.  ஒதறிட்டு அப்புறம் அடிக்கலாம்."
...  ....  ...  ...  ...

"நெல்லா அடிகாண ஒதறு"

"என்னடா குள்ள பயல வைக்கலாம் கூழ் கூழா பொயிட்டது...?"
....      ....        .....    ....

சும்மா ரெண்டு சுத்து சுத்து போதும்"
....      ....        .....    ....

நெல்லா வைக்கல நெல்லு இல்லாம சிலுக்க ஒதறு"
....      ....        .....    ....

போர கெழக்கால போடு காத்த மறைக்காம, ஒருத்தம் போருல நில்லு"
...      ....        .....    ....

"நெல்ல ரெண்டு முட்டாக்கிக்க"
....      ....        .....    ....
 
"பாதி நெல்ல தெக்க தள்ளு, பாதிய வடக்க முட்டாக்கு. பிரி வச்சி தள்ளு"

....      ....        .....    ....
....      ....        .....    ....

"வெளக்க மாத்த எடுத்து கூட்டம்புள்ள.  வேடிக்க பாத்துகிட்டு நிக்குற....?"
....      ....        .....    ....

இன்னமுட்டும் அடி அடின்னு அடிச்சது.  இப்ப காத்தயே காணும்"

....      ....        .....    ....

"மூட்டம் போடுங்க....ஏய் கருக்கால அள்ளி போடுறா...ம் ....இப்ப அள்ளிபோடு கூளான. பத்தவையி"

....      ....        .....    ....

"போரையான உட சொல்லு, அவந்தான் வாட்டபிலி நெல்லா உடுவான் மேல காத்துதான் அடிக்குது.....உடு..."

....      ....        .....    ....


மொறத்தால விசுறு, நெல்லா...கூளான் போறாபல விசுறு"

....      ....        .....    ....

"இந்தா குள்ளம்  பொண்டாட்டி...சாக்க எடுத்து தலையில போட்டுகிட்டு கட்டிய தள்ளு"

....      ....        .....    ....

"உடு....உடு....உடு...கிடுகிடுன்னு அள்ளி உடு...."

....      ....        .....    ....
"மிம்மாரிய கழிச்சி உடு"
....      ....        .....    ....
"நெல்லா ஒட்ட கழி...."
....      ....        .....    ....

"ம்...கருன வையி"

....      ....        .....    ....
"அந்த அரவா, காவா நெல்ல அள்ளி தனியா கொட்டு"
....      ....        .....    ....

"காத்து அடிக்குது பாரு வாரி உடு...வாரி உடு...."

....      ....        .....    ....
என்னடா....குள்ளா...இருவது மூட்டையாவது தேறுமா....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க பெரியாண்ட...."
"யூரியாவ திட்ட மட்டமா போடுனும்...மின்னபின்ன செத்திருந்தால்ல சுடுகாட்டுக்கு வழி தெரியும்"

....      ....        .....    ....

"இன்னும் ஒரு தரம் மிம்மாரிய கழிங்கடா...."
....      ....        .....    ....
"சுருண வச்சதோட கழிச்சிங்கள...?"
....      ....        .....    ....
"தா...சாணி கெடக்கு பாரு புள்ளியாரு புடிச்சி ஒரு அருவம் பில்ல சொருவு....சனி மூலையில வையி"
....      ....        .....    ....

"பரைய எடுத்து அள"

"குள்ளன் அளக்க அளக்க ஒவ்வொரு பரைக்கும் ஒரு குத்து நெல்லை அள்ளி எண்ணிக்கைக்காக வைத்தாள் முத்தம்மா.

சாக்குகள் நிரம்ப நிரம்ப பட்டரை காலியானது.  குள்ளனின் நெஞ்சில் உலக்கை போட்டு இடித்தது.

நெற்குவியல்களை எண்ணிப் பார்த்துவிட்டு "கொல்ல வாரம் எட்டு மூட்டை, தண்ணிவாரம் பத்து மூட்ட, வண்டி வாடக ரெண்டு மூட்ட சரிதான...?" என்றார்.

"ரெண்டு மூட்டயாவது உட்டு குடுங்க பெரியாண்ட. அடுத்த போவத்துல சேத்து குடுத்துடுறன்"

"என்னா மசுருக்குடா... ஒனக்கு குத்துவைக்கு உட்டதுக்கு தெண்டம....?"

"பொகையான் அடிச்சிட்டுதுங்க ....எனக்கு ஒன்னும் மீறலன்னாலும்....கூலி நெல்லாவது உட்டுகுடுங்க சாமி"

"அன்னிக்கே பேசிதாண்ட உட்டன்.  நீ கூலிதாங் குடு எதாவது செய்யி. நான் என்னமோ ஒன்ன ஏமாத்தி வாங்கிகிட்டு  போறாபல பேசுகிறிய...ஒன்னுகிட்ட குத்துவைக்கி உட்டம் பாரு ஏம் புத்திய செருப்பால அடிக்கனும்டா"

"அய்யய்யோ....ஏங்கசாமி பெரிய வாத்தையெல்லாம் பேசுறிங்க...நீங்க நெல்லா இருப்பிங்க, நீங்களே கொண்டுகிட்டு போயி சாப்புடுங்க...."

"அடி....செருப்பால...பற  தேவடியா...."

"என்ன ஏன் அடிக்கனும்....கையால ஆவாதவன்லாம் எதுக்குடா பயிறு வைக்கனும் அவன அடிங்க..."

"இந்த பறக் கழுதைகிட்ட என்னாடா பேச்சு....நெல்ல ஏத்திகிட்டு வாங்கடா"
துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் பெரியாண்டை.

"குள்ள சாடு மாறி...வெக்குனவ(ம்) வெளாம்பழத்த  தின்னமேரி நிக்குறாம் பாரு"

....நஞ்ச தின்னவன...பொறம்போக்கு மரத்தபாத்து  நாணுக்கியண்டா....த்தூ....!

Sunday, September 18, 2011

நிலாப்பெண்ணே இதழில் தாகம் சிறுகதை




2009இல் நான் எழுதிய சிறுகதை "தாகம்" நண்பர் வீரமணி ஆழி இதழுக்காக அனுப்பியது. அப்போது வெளியாகவில்லை. அவர் இப்போது நிலாப் பெண்ணே இதழின் பொறுப்பாசிரியர். இப்போது அக்கதையை வெளியிட்டுள்ளார். நண்பர் முத்துவேல் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுத்தார் அவருக்கும் வெளியிட்ட வீரமணிக்கும் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். 

Saturday, June 27, 2009

தாகம்(சிறுகதை)

வழக்கத்திற்கு மாறாக இன்று பல்லவன் சரியான நேரத்திற்கு வந்துவிட்டது. இதை எதிர்பார்க்காத பலர் ஏமாந்தனர். சீட்டு வாங்குமிடத்திலும் கூட்டம் குறைவுதான். முன்பே சீட்டுவாங்கி காத்திருந்தவர்களை பெண்காவலர்கள் வரிசையில் நிற்கவைத்து பெட்டிக்குள் அனுப்பிக்கொண்டிருந்தனர். குறுக்கே வந்து ஏற முயற்சித்தவர்களைக் கண்டித்து வரிசைக்குப் பின்னால் அனுப்பத் தவறவில்லை. காந்தி வழக்கம் போல் அலட்சியமாக வந்து வரிசையில் சேர்ந்துகொண்டான். இடம் கிடைப்பது கடினம்தான் இருந்தாலும் நின்று பார்ப்போம் என்றுதான் நின்றான். ஒரு பெரியவர் பெண் காவலர் ஒருவரிடம் வயசானவன் என்னால நிக்க முடியல இது மாதிரி அனுப்புவீங்கன்ன தெரியாது கொஞ்சம் விடுங்கம்மா என்று கனிவாகக் கேட்டுப்பார்த்தார். ஒங்கள மாதிரி வயசானவங்கல்லாம் நிக்கிறாங்க பாருங்க தெரியலன்னா இப்ப தெரிஞ்சிக்கோங்க என்று கூறியபடி வரிசையை ஒழுங்கு படுத்தத் தொடங்கினார். ஒரு வழியாக காந்தி உள்ளே சென்றான் எல்லா இருக்கைகளும் நிறைந்திருந்தன. உள்ளே செல்லச் செல்ல இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது இரண்டு குழந்தைகளும் ஒரு முதியவரும் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னொருவர் அமரலாம் அங்கு பையை வைத்திருந்தனர். எதற்கும் கேட்டுப்பார்ப்போமே என்றுதான் கேட்டான் அவன் எதிர்பாராத விதமாக எதிரே அமர்ந்திருந்த பெண் அந்த பைய எடுங்கப்பா அவரு உக்காரட்டும் என்று கூற எதிர்பாராமல் இடம் கிடைத்த மகிழ்ச்சியை புன்னகைத்து நன்றி கூறி வெளிப்படுத்தினான். மெல்ல மெல்ல வண்டி நிறையத் தொடங்கியது. காந்திக்கு அருகில் வந்த நடுத்தர வயதுக்காரர் இன்னைக்கு வண்டி நேரத்தோட வந்துட்டுதோ எனக்கேட்க வண்டி சரியான நேரத்துக்குதான் வந்துது நீங்கதான் லேட் என்று தலையை ஆட்டி கேட்பவர் புன்னகைக்கும்படி தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு பதிலளிக்க இடம் கிடைக்காத வருத்தத்தை மறந்து சிரிக்கத்தொடங்கினார். பக்கத்திலிருந்தவர்களும் காந்தியின் பதிலுக்கு சத்தமில்லாமல் சிரித்தனர். பெட்டிக்குள் மின் விசிரிகளிருந்தும் வேர்த்துக்கொட்டியது.இவனுக்கு தாகம் நாக்கை வரட்டியது. தண்ணீர் வாங்கி வந்திருக்கலாம். இனிமேல் போவது கிடைத்த இடத்திற்கு ஆபத்தாகி விடும். பையை வைத்துவிட்டு பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிவிட்டுப் போகலாம். ஏனோ அப்படிச் செய்ய மனமில்லை எல்லோர் கைகளிலும் தண்ணீர் பாட்டிலிருந்தது. கேட்டு வாங்கிக் குடிக்க சுயமரியாதை இடமளிக்கவில்லை. தண்ணீர் விற்பவர்கள் வந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டான். ஒருவரும் வருவது போல் தெரியவில்லை. வேறு வழியின்றி வேர்வை சொட்டச் சொட்ட காப்பி வாங்கி குடித்தான். எதிரில் அமர்ந்திருந்த மற்றொரு அம்மாவை வழியனுப்ப வந்திருந்த அவர் தம்பி குடும்பத்தினர் மஞ்சள் நிற குளிர்பான பாட்டிலை வாங்கி நீட்ட எதுக்கு அதான் தண்ணி இருக்கில்ல நீங்க குடிங்க இந்தா கோபி நீகுடிச்சுட்டு குடு என்று வெளியில் நின்று கொண்டிருந்த சிறுவனிடம் நீட்ட அவன் வேண்டாம் அத்த... என்று தலையை ஆட்டினான். கட்டாயப்படுத்தவே வாங்கி ஒருவாய் குடித்தான் வெளியில் நின்றவர்கள் ஆளுக்கு ஒருவாய் குடித்து அரை பாட்டிலுக்கு மேல் காலி செய்து திருப்பிக் கொடுத்தனர். வாங்கி குடிக்கும் போது காந்தி சாடையாகப் பார்த்தான் நாம் பார்ப்பதை வேறுயாராவது பார்க்கிறார்களா என்று கண்களைச் சுழற்றி நோட்டம் விட்டான் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் இவனைப்போலவே குளிர்பானம் குடித்த அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.அவரும் நம்மைப்போல தாகத்தோடு இருக்கிறார் என்பதை அவரின் அந்தப் பார்வை உணர்த்தியது. வண்டி கிளம்பத் தயாரானது வழியனுப்ப வந்தவர்கள் விடை பெறத் தொடங்கினர். பக்கத்து இறுக்கையில் அமர்ந்திருந்த பெரியவருக்கும் தண்ணீர் தாகமாகத்தானிருக்க வேண்டும். தண்ணீர் குடிப்பவர்கள் வாயை அண்ணாந்து ஏக்கமாகப் பார்த்தார். ஒருவர்கூட அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம் என எந்த நிலையத்திலும் தண்ணீர் விற்பவர்கள் வராமல் போனது வியப்பாக இருந்தது. தாகம் நாக்கை வரட்டியது தொண்டை வரண்டு உதடுகளுக்கும் பரவியது வரட்சி. யார் யாரெல்லாம் தண்ணீர் வைத்திருக்கிறார்கள் என நோட்டம் விட்டான் இவனைத்தவிர எல்லோரிடமும் இருந்தது.ஒருத்தரின் முகமும் தண்ணீர் கேட்டால் கொடுப்பது போலில்லை.காசு கொடுத்து வாங்குகிற பொருளாகி விட்ட தண்ணீரைக் குடிக்க ஓசியில் கேட்பது நியாமில்லை அப்படியே கேட்டாலும் வாங்கிக்க வேண்டிதான என்ற பதில்தான் வரும் அதற்குக் கேட்காமலிருப்பதே புத்திசாலித்தனம். இருந்தாலும் நா வரட்சி தாக்குப் பிடிக்க முடியல.அந்தப் பெரியவருக்கும் அப்படித்தானிருந்திருக்க வேண்டும் அவர் தாகத்தில் தவிப்பது முகத்தில் தெரிகிறது. மெல்லிய தூரல் விழத்தொடங்கியது. சற்று குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. பெரியவர் முகம் சற்று மலர்ந்தது. தாகம் தணிந்தது போல் உணர்ந்திருக்க வேண்டும். அவருக்கு பக்கத்தில் அவரைப் போலவே வேட்டி கட்டியிருந்தவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்தார் இவர் மீண்டும் அண்ணாந்து அவர் வாயைப்பார்த்தார் குடித்து முடித்ததும் கெஞ்சுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கையை நீட்டினார். கொடுத்ததும் கொஞ்சமாகத் தொண்டையை நனைத்துக்கொண்டு சுடுது இல்ல.. என்னா வெய்யிலு.. ஏ அப்பா என்று பெருமூச்சு விட்டார்.ஒரு வாய் மட்டும் குடித்துவிட்டு தந்து விட்டார் தாகம் அடங்கவில்லைதான் என்ன செய்வது.ஓசியில வாங்கி தாகம் தீரக் குடிக்க முடியுமா. பொறியியல் கலந்தாய்வுக்கு சென்று வந்த மகளும் தந்தையும் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியின் சிறப்புகளை பேசியபடி கையிலிருந்த குளிர்பானத்தை குடித்துக்கொண்டு வந்தனர். அவர் அதையும் ஏக்கமாகப் பார்த்தது காந்தி மனதுக்கு சங்கடமாக இருந்தது. இன்னும் அஞ்சு வருடம் கழிச்சு நான் ஒன்னோட அதிகமா சம்பளம் வாங்குவன் மகள் கூறியதைக் கேட்ட அப்பாவுக்கு பூரிப்பு. இவனுக்கு இடம் தந்த முதியவர் எதிரில் அமர்ந்திருந்த தன் மகளிடம் ஏதோ கிசுகிசுக்க பையைத் திறந்து முறுக்குப் பொட்டலத்தை எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்தார் நமக்கும் கொடுத்துவிடுவார்களோ கொடுத்தால் எப்படி மறுப்பது என்று யோசித்தபடி முகத்தை வேறுபக்கம் வேடிக்கை பார்ப்பது போல் திருப்பிக்கொண்டான். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் என்ன மனிதர்கள் இவர்கள் பக்கத்திலிருப்பவர்களிடம் ஒரு மரியாதைக்காகவாவது கேட்க வேண்டாமா என்று மனதுக்குள் கூறிக்கொண்டான். குழந்தைகள் முறுக்கைத்தின்று முடித்ததும் தண்ணீர் கேட்கத்தொடங்கிவிட்டனர். தண்ணீர் பாட்டிலைக் கொடுக்க ஒரு பாட்டிலைக் காலி செய்தனர். அதையும் பெரியவர் உமிழ்நீரை விழுங்கியபடி பார்த்துக்கொண்டிருந்தார். விழுப்புரம் வந்து விட்டது தோச... வட...சம்சா... டீ...காபி..... வாட்டர்.... கூல்டிரிங்ஸ்...என பல வித சத்தம் கேட்க காந்தி ஒரு பாட்டில் தண்ணீரை வாங்கி கட கட வென குடித்தான் பெரியவர் பழயபடி பார்க்கத்தொடங்கினார். பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கியதைப் பார்த்துக்கொண்டுதானிருந்தார் அதனால் நம்மிடம் கேட்க மாட்டார் என்றுதான் நினைத்தான் ஆனாலும் அவர் கைகள் அவனை நோக்கி நீண்டன் அவனும் கொடுத்தான் இரண்டு வாய் குடித்துவிட்டு கொடுத்ததும் காந்தி கேட்டேவிட்டான் நானும் பாத்துகிட்டுதான் வரன் இம்மான் தாகத்தோட வரீங்கள ஒரு தண்டி பாட்டிலுதான் வாங்குனா என்ன..? நம்ம வசதிக்கு பதினைஞ்சு ரூவா குடுத்து தண்ணி வாங்கி குடிக்க முடியுங்களா?