தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) சென்னையில் (18,19.12.2014) நடத்திய மாநில கருத்தரங்கில் அளித்த கட்டுரை இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ளது.
முன்னுரை
தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி
கண்டுள்ள இந்த நூற்றாண்டில் தகவல்கள் உள்ளங்கையில் கிடைக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில்
பள்ளிக் குழந்தைகளை மின்னணு சாதனங்கள் அளவிற்கு பாட நூல்கள் கவர்வதில்லை. இதனால் பாட
நூல்களை மட்டும் நம்பியுள்ள ஆசிரியர்கள் கற்பித்தலில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களையும் அவற்றின் வாயிலாகக் கிடைக்கும் வளங்களையும்
தெரிந்துகொள்வது இருபத்தொன்றாம் நூற்றாண்டு
ஆசிரியரின் கட்டாயத்தேவையாகிறது. அந்த வகையில் இந்த நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பத்தில்
ஏற்பட்டுள்ள புரட்சியாகக் கருதப்படுகின்ற இணையதளங்கள்
வாயிலாக மாணவர்களும் ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தல் வளங்களை ஒரு சின்னஞ்சிறு கைபேசியின்
வாயிலாக அமர்ந்த இடத்திலிருந்தே பெற்றுக்கொள்ள முடிகிறது. கலை, இலக்கியம், அறிவியல்,
விளையாட்டு, தொழில்நுட்பம் எனப் பல துறை சார்ந்த தகவல்களை இணையதளங்கள் வாயிலாகப் பெறமுடிகிறது.
மாணவர்களுக்கு பயன்படக்கூடிய இணையதளங்கள் மற்றும் வலைப்பூக்களை சக ஆசிரியர்களோடு பகிர்ந்துகொளவதாக
இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
குழந்தைகளுக்கான
வலைத்தளங்கள்
குழந்தைகளுக்கான வலைத்தளங்களை கலை, இலக்கியம்,
அறிவியல், விளையாட்டு, தொழில்நுட்பம் என வகைப்படுத்தலாம்.
கலைகளுக்கான வலைத்தளங்கள்:
குழந்தைகளைக் கவரும் கலைகளில் முதன்மையானது
ஓவியக்கலை. ஓவியக்கலையை ஒரு ஓவியர் கற்றுத்தருவதைப்போல் ஒவ்வொரு கோடாக யாருடைய துணையுமின்றி
கணினியின் முன் அமர்ந்து கற்றுக்கொள்ள வகை செய்கிறது http://www.unclefred.com
என்ற இணையதளம். இந்த தளத்தில் பன்னிரண்டு வகை கார்ட்டூன் ஓவியங்களை வரையக்கற்றுக்கொள்ளலாம்.மேலும்
ஓவியங்கள் வரையும் காணொளிக் காட்சிகளாகவும்
யூ ட்யூபில் கிடைக்கின்றன.
http://www.drawingnow.com இந்த தளம் ஒவ்வொரு படியாக ஓவியம் வரைய கற்றுத்தருகிறது.ஒரு
எளிமையான வீடு படம் வரைய 12 படிநிலைகள் உள்ளன. நம் கண்முன்னே வரைந்து காட்டுகிறது.அதனைப்பார்த்து
தனியாக தாளிலோ அல்லது கணினியிலோ வரைந்துகொள்ளலாம்.
http://www.my-how-to-draw.com இந்த தளத்தில் படிப்படியாக முன்னரே வரைந்து வைத்துள்ளனர்
ஒவ்வொரு படியாகப் பார்த்து வரைய வசதி செய்யப்பட்டுள்ளது.
http://www.cartooncritters.com இந்த தளத்தில் ஓவியங்களை பல வகையில் அச்சு நகல்
எடுத்து மாணவர்களுக்கு வழங்கி வண்ணம் தீட்டிட பயிற்சி அளிக்கலாம். புள்ளிகளை இணைத்து
ஓவியம் வரைவதற்கும் பயிற்சிகள் இங்கே நிறைய உள்ளன.
http://dev.neechalkaran.com கோல சுரபி என்னும்
இத்தளம் தமிழ் ஆங்கிலம்,இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ளது. புள்ளிகள்
எண்ணிக்கை அடிப்படையிலும் சதுரம், சாய் சதுரம் என்று வடிவங்களின் அடிப்படையிலும், வளைவுகள்
கோடுகள் என கோடுகள் அடிப்படையிலும் கோலங்களைக் கற்றுத்தருகிறது இந்த தளம்.
கைவினைக் கலைகளுக்கான வலைத்தளங்கள்:
http://www.kinderart.com இந்த தளத்தில் இரண்டரை
வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கைவினைக் கலைகள் பல உள்ளன. ஒருமுறை மட்டும்
பயன்படுத்தும் பல வகையான பொருள்களை மறுசுழற்சி முறையில் கலைப்பொருளாக செய்வதற்கான பல
எடுத்துக்காட்டுகள் உள்ளன. தாள் முதல் காலணி வரை எல்லாம் இங்கே கலைப்பொருள்களாக மாறுகின்றன.
நம் குழந்தைகள் அவசியம் பார்க்கவேண்டிய தளம் இது.
http://www.enchantedlearning.com இந்த தளம் பல நூறு வகை கலைப்பொருள்கள் செய்யக் கற்றுக்கொடுக்கிறது.
உறிஞ்சுகுழல், பலூன், களிமண், தாள் என எளிதில் கிடைக்கும் பொருள்களில் கலைப்பொருள்கள்
செய்வதற்கான முறைகள் விளக்கப்பட்டுள்ளன.
இலக்கிய வலைத்தளங்கள்
சிறுவர்
பூங்கா: http://siruvarpoonga.blogspot.in/
இது பரஞ்சோதி என்பவரால் பதியப்படும் வலைப்பூ.
குழந்தைகளுக்கான கதைகள் நிறைந்து காணப்படுகின்றன.
தினம்
ஒரு சென்: http://zendaily.blogspot.in/
கங்கா அவர்களின் இந்த வலைப்பூவில் சென்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு பதிவுசெய்யப்படுகிறது.
குட்டிக்கதைகள்
: http://tamil-kutti-kathaikal.blogspot.in
உதயகுமார்
வெளியிடும் இந்த வலைப்பூ பல்வேறு மொழிகளில் வெளிவந்த நீதிக்கதைகளை மொழிபெயர்த்து பதிவுசெய்யப்படுகிறது. http://tamilcomicsulagam.blogspot.in
200 க்கும் மேற்பட்ட (காமிக்ஸ்) படக்கதைகள் இந்தத் தளத்தில் உள்ளன.
http://www.thamizham.net பல அரிய நூல்கள், இதழ்களை
ஒருங்கே தொகுத்துவைத்துள்ளார் பொள்ளாச்சி நசன். சிற்றிதழ் செய்தி என்ற இதழை நடத்தியவர்.
இதுவரை 30600 கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். இது தமிழில் தனிநபர் செய்துள்ள மிகப்பெரிய
ஆவணம் எனலாம். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய பல தகவல்கள் இந்த தளத்தில் உள்ளன.
http://www.tamilsirukathaigal.comஈசாப்
நீதிக்கதைகள்,பஞ்ச தந்திரக் கதைகள்,தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள் என பல வகைக் கதைகள்
இந்த தளத்தில் உள்ளன.
http://tamilarivukadhaikal.blogspot.inஅறிவுக்கதைகள்,
புதிய நீதிக்கதைகள், நகைச்சுவைக்கதைகள், சிந்தனைக்கதைகள் என பல்வகைகதைகள் 300க்கும்
மேல் உள்ளன.
அறிவியல் வலைத்தளங்கள்
http://www.ariviyal.in இதன் ஆசிரியர் ராமதுரை
தினமணி நாளிதழின் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். 2009-ல் சிறந்த அறிவியல் எழுத்தாளருக்கான தேசிய விருதைப் பெற்றவர்.இவர் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் தமிழில் சிறந்த அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
http://arivialnambi.blogspot.in
அணு, அண்டம், கடவுள் துகள் என பல் சுவையான அறிவியல் செய்திகள் இத்தளத்தில் உள்ளன.
http://www.tnkanitham.in சிவகங்கை மாவட்டத்தில்
பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் செந்தில் செல்வன் அவர்களின் கணினி வழி கணிதம் என்னும்
இத்தளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடத்தலைப்புகளும் பவர் பாயிண்ட்டுகளாகவும்
காணொளிக்காட்சிகளாகவும் காணக்கிடைக்கின்றன.
http://sweatmaths.edublogs.org
கணக்கும் இனிக்கும் என்னும் இந்த வலைத்தளம் இக்கட்டுரை ஆசிரியரால் உருவாக்கப்பட்டதாகும்.
வளரறி மதிப்பீடுகளுக்கான செய்ல்பாடுகள், கணித ஆய்வகம், கணிதவியலாளர்களின் வரலாறு,புதிர்கள்,
செயல்திட்டங்கள் ஆகியன இந்த தளத்தில் உள்ளன.
விளையாட்டுக்கான வலைத்தளங்கள்
ஆடுபுலி ஆட்டம், http://dev.neechalkaran.com/p/aadu-puli.html இந்த தளத்தில் உள்ளது. தமிழில் சொல் புதிர்கள்
http://dev.neechalkaran.com/p/tamil-puzzle.html இந்த இணைப்பில் உள்ளன.
http://www.kidsgames.org கல்வி, வேடிக்கை,நாடுகளும் கொடிகளும் போன்ற பலவகை
விளையாட்டுகள் இந்த தளத்தில் உள்ளன.
http://www.kidspsych.org 1 முதல் 9 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு பல் வகை
விளையாட்டுகள் இங்கே கொட்டிக்கிடக்கின்றன.
தொழில் நுட்ப இணையதளங்கள்
http://www.tamilinfotech.com/
கணினி, மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் போன்றவை பற்றி அறிந்துகொள்ள புதிய செய்திகள் பல
உள்ளன.
http://www.bloggernanban.com தொழில் நுட்பம் சார்ந்து ஆயிரக்கணக்கான தகவல்கள்
உள்ளன.
http://arjunmathu.blogspot.in மாணவர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்கள், பென்
டிரைவ் சில பயனுள்ள தகவல்கள், பாய்ச்சல் கோட்டுப்படங்கள் ,ஹார்டு வேர்டு பிரச்சனைகளும்
தீர்வுகளும் போன்ற தொழில் நுட்பச்செய்திகள்
நூற்றுக்கணக்கில் உள்ளன.
http://www.mytamilpeople.in/ தகவல் தொழில் நுட்பம் தமிழர்களுக்காக தமிழில் என்ற
முழக்கத்தோடு பல தகவல்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்பது, மிகச்சிறந்த மென்பொருள்கள்
, கணினி அகராதி போன்ற பயனுள்ள தகவல்கள் உண்டு.
முடிவுரை
பாட நூல்களுக்கு வெளியே தகவல் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கும் படைப்பாற்றலுக்கும் வழிவகுக்கும் தளங்களை
இக்கட்டுரை அறிமுகம் செய்திருக்கிறது.
இருபத்து ஒன்றாம் நூற்றாண்டின் வகுப்பறை
என்பது பாடநூல்களைத் தாண்டியும் விரிந்த தளத்தில் செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது
என்பதை இந்த ஆய்வுக்கட்டுரை வலியுறுத்துகிறது.
அதற்கான தொடக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது.
நூற்றுக்கணக்கான இணைய தளங்களை ஆய்வு செய்து
அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது இணையதளங்கள் மட்டுமே இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுளன.
விரிவஞ்சி சில இணைய தளங்களைக் குறிப்பிட
இயலவில்லை. இதில் குறிப்பிட்டுள்ள இணையதளங்களைப் பார்வையிடும் ஆசிரியர்கள், மாணவர்கள்
ஆகியோருக்கு பயனுள்ள இணையதளங்களை தேடுவதற்குத் தூண்டுகோலாக இக்கட்டுரை அமையும்.
இக்கட்டுரைக்காக இணையதளங்களை தேடியபோது
இக்கட்டுரை ஆசிரியர் பெற்ற பட்டறிவின் விளைவாக கணக்கும் இனிக்கும் என்றொரு கல்விச்
செயல்பாடுகளுக்கான வலைப்பூவை உருவாக்கியுள்ளார். இக்கருத்தரங்கின் நல் விளைவாக இதனைக்
கருதலாம்.