தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Monday, December 10, 2012

கொசுக்களை உற்பத்தி செய்யவா நகராட்சி?




புகாருக்குப் பின் தங்கம் நகரில் திரு பூராசாமியின் காலி மனையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


புகாருக்கு முன் சாலையில் வழிந்தோடிய கழிவு நீர்.

விருத்தாசலம் பெரியார் நகரும் தங்கம் நகரும் அருகருகே அமைந்துள்ள புறநகர்ப் பகுதிகள். பெரியார் நக்ரின் முதன்மைச்சாலையான அண்ணாசாலையானது கடலூர் சாலையையும் சிதம்பரம் சாலையையும் இணைக்கும் ஒரு முக்கிய சாலையாகும். இச்சாலை தங்கம் நகர் வழியாகத்தான் செல்கிறது.ஆனால் சுமார் 30 அடி நீளம் இணைப்புச்சாலை அமயவேண்டிய இடத்தில் திரு. பூராசாமி என்பவரின் காலி மனை உள்ளது.குடியிருப்போர் நலச்சங்கங்கள் அவரிடம் பேசி இணைப்புச் சாலை அமைக்கத்தேவையான இடத்தினை நகராட்ச்சிக்கு தானமளிக்கச் செய்தோம். நகராட்ச்சிக்கு சாலை அமைக்கத் தனது வீட்டுமனையில் ஒரு பகுதியை தானமாக அளித்தார். அதில் சாலையும் அமைக்கப்பட்டது. இந்த இணைப்புச்சாலைக்கு வடக்கிலும் தெற்கிலும் கழிவு நீர்க் கால்வாய் உள்ளன. அவை இரண்டு கால்வாய்களையும் இணைத்தால்தான் கழிவு நீர் சாலையில் ஓடாமல் கால்வாயில் ஓடும். இக்கோரிக்கையினை இடத்தை தானம் செய்த போதே அப்போதைய நகராட்சி ஆணையர் திரு. திருவண்ணாமலை அவர்களிடம் முன் வைத்தோம். முதலில் சாலை அமையட்டும் அடுத்து கால்வாய் அமைக்கலாம் என கூறியவர் மாறுதலாகி சென்று விட்டார். அதன் பிறகு பொருப்புக்கு வந்தவர்களுக்கு இந்த வரலாறு தெரியவில்லை. காலங்கள் ஓடின கால்வாய் அமைக்காததனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது .இது குறித்து பல முறை புகாரளித்தோம். நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவே வேறு முயற்சியில் இறங்கினோம். மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு என எல்லா இடத்திலும் புகார் கொடுத்தோம் செய்தித்தாளில் இது பற்றி செய்தி வெளிவந்தது. நகராட்சியிலிருந்து பார்வையிட்டு சாலையில் வழிந்தோடிய சாக்கடை நீரை இணைப்புக் கால்வாய் அமைத்து தங்கம் நகர் கால்வாயில் விடுவார்கள் என்று நினைத்தோம். யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவினை நகராட்சி நிர்வாகம் எடுத்தது.அந்த முடிவுதான் சாலைக்கு இடம் தந்த பூராசாமியின் காலிமனையில் சாக்கடையை விட்டு நிரப்புவது .அதன் மூலம் கொசுக்களை உற்பத்தி செய்து மக்களுக்கு தொற்று நோயைப் பரப்புவது.முதலமைச்சர் தனிப்பிரிவுக்கா புகார் செய்தீர்கள் உங்களுக்கு இதுதான் தண்டனை.என்பது போல் உள்ளது நகராட்சியின் செயல்பாடு.
ஐயா அதிகாரிகளே பொது மக்களுக்கு நீங்கள் செய்யும் தொண்டு இதுதானா? ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் வசிக்கும் பகுதிக்கு உடனே சாலை அமைக்கின்றீர்கள் கழிவு நீர்க் கால்வாயும் அமைக்கிறீர்கள்.அப்பாவி பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இதுபோல் கொசுக்களை உற்பத்தி செய்து விடுகிறீர்களே இது நியாயமா?  சாலைக்கு இடம் தந்தால் சாக்கடைதான் பரிசா?


Friday, December 7, 2012

கணையாழி விமர்சனக்கூட்டம்


கணையாழி விமர்சனக்கூட்டம்



நாள் : 9.12.12 காலை 10.00 மணி

இடம் : வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர்,   விருத்தாசலம்.

வரவேற்பு : இரத்தின புகழேந்தி

முன்னிலை : கோ.பாக்யராஜ்

தலைமை : இமையம்

விமர்சனம் : கரிகாலன், ரவிகார்த்திகேயன்,செந்தில்வேலன், அசதா, காலபைரவன், அமலநாயகம், தேவராஜ், அமிர்தராஜ், அண்ணாதுரை.

சிறப்புரை : ம.இராசேந்திரன் ஆசிரியர் கணையாழி,(மு) துணைவேந்தர்,த.ப.க., தமிழ் வளர்ச்சித்துரை இயக்குநர்.

நன்றியுரை : கனகராஜ்

நிகழ்ச்சி ஏற்பாடு : திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம்.

அனைவரும் வருக

Friday, November 30, 2012

நாட்டுப்புற இலக்கியம் அறிவோம்




சுட்டிவிகடன் வழங்கும் சுட்டித்தமிழ்.வானொலியில் நாட்டுப்புற இலக்கியம் அறிவோம் என்னும் தலைப்பில் டிசம்பர் 1 முதல் 15 வரை தினம் ஒரு சுவாரசியமான தகவல்களைத் தருகிறார் நாட்டுப்புறவியலாளர் முனைவர் இரத்தின புகழேந்தி.
தாலாட்டுப்பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள் நாட்டுப்புறக் கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நகைப்புகள் என குவிந்துகிடக்கும் நட்டுப்புற இலக்கியங்கள் பற்றி கேட்க 044 66802905 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். சாதாரணக் கட்டணமே.

Sunday, November 4, 2012

மலேசியாவில் 10ஆம் உலகத் தமிழாசிரியர் மாநாடு



முதல் உலகத் தமிழாசிரியர் மாநாடு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், 1992-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்றது.  இதுவரை ஒன்பது உலகத் தமிழாசிரியர் மாநாடுகள் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, மொரிசியசு, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சிறப்பாக நடந்தேறியுள்ளன.  பத்தாம் உலகத் தமிழாசிரியர் மாநாடு 2013 ஆம் ஆண்டு மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் மிகச்சிறப்பாக நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டுக்குத் தமிழ்க்கல்வி குறித்த கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.


மாநாட்டின் நோக்கம்

1. தமிழ் கற்றல் கற்பித்தல் ஆகியவற்றில் மேம்பாடு காணத் திட்டமிடுதல்.

2. தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள், தகவல் தொடர்பு தொழில்நுட்ப வளமைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழிவகைகளை ஆராய்தல்.

3. உலகத் தமிழாசிரியர்களிடையே தமிழ் கற்றல் கற்பித்தல் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களும் பகிர்வுகளும் நிகழ வகை செய்தல்.

4. பல நாடுகளைச் சேர்ந்த தமிழாசிரியர்களிடையே அணுக்கத் தொடர்பும் நிபுணத்துவ ஒத்துழைப்பும் ஏற்பட வழிவகுத்தல்.


Objectives of the Conference

1.To plan for developments in the teaching and learning of Tamil Language.

2.To explore the use of innovative approaches, and Information and Communication Technology resources for the teaching and learning of Tamil Language.

3.To facilitate the exchange  of views and promote sharing of ideas among Tamil Language teachers from around the world.

4. To promote networking and professional collaboration between Tamil Language educationist from various countries.


ஆய்வுக் கட்டுரைகள்


கட்டுரைகள் 20 நிமிடங்களுக்குள் படைக்கப்படும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் 120 சொற்களுக்குள் அமைதல் வேண்டும்.
ஒருங்குறி (Unicode) முறையில் தட்டச்சு செய்து 15.12.2012ஆம் நாளுக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.


கட்டுரை தேர்வுக்குழுவின் முடிவுகள் சம்பந்தப்பட்ட பேராளர்களுக்கு 15.01.2013ஆம் நாளுக்குள் தெரிவிக்கப்படும்.
முழு வடிவம் கொண்ட ஆய்வுக்கட்டுரையைத் தட்டச்சு செய்து 28.02.2013 தேதிக்குள் மாநாட்டுக் குழுவினருக்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்கவும்.
பின்வரும் தலைப்புகளைத் தழுவியமைந்த கட்டுரைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன

1. கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்
       - ஊடகங்களின் தாக்கம்
      - தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு
      - புதுக்கோட்பாடுகள் , Language Teaching Learning Methods ( LTLM )

2. தமிழை இரண்டாம் மொழியாகப் பயில்வோர்க்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

3. பிறமொழி மாணவர்கள் தமிழை எளிமையாக கற்றுக் கொள்வதற்கான பயிற்று முறைகள்/நடவடிக்கைகள்

4. புலம்பெயர்ந்த நாடுகளில்/சூழலில் தமிழ்க் கல்வி

5. பண்பாட்டு விழுமியங்களைப் பேணுவதில் தமிழ்க் கல்வியின் பங்கும் பணியும்

6. தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் மதீப்பீட்டில் புதிய அணுகுமுறை

7. தமிழ்மொழிப் பயன்பாட்டில் கருத்தாடல் திறன் வளர்த்தல்

கட்டுரைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
Email : mail@worldtamilteachersconf.org

Contact Address:

10 th World Tamil Teachers Conference
C/O Department of Malaysian Languages & Applied Linguistics,Faculty of Languages and Linguistics
University of Malaya,
50603,Kuala Lumpur

Contact Details:
Chairman: 03-79673142
Secretary: 03-87331590
Tel: 603-7772 1 714
Fax: 603-7967 3 142

 http://www.worldtamilteachersconf.org/default.aspx

நன்றி :http://muelangovan.blogspot.in/2012/11/10.html

Tuesday, October 2, 2012

சபர்மதி ஆற்றங்கரையில்..

                                            காந்தி ஆசிரம நுழைவாயில்
                                          காந்தி ஆசிரமம் முதன்மைக் கட்டடம்
                                                            சிறுவர்களுடன் காந்தி

                                                     சபர்மதி ஆர்ர்ங்கரையில்
                                     கை ராட்டையில் நூல் நூற்க முயற்சி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தில் ஆசிரியர்களை கல்விச்சுற்றுலா அழைத்துச்சென்றனர்.அதில் மும்பை அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அகமதாபாத் நகரில் சபர்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள காந்தி ஆசிரமம் சென்றோம். அவரின் பல நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்திற்கும் மேலாக அந்த இடம் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. காந்தி சிறப்பானதொரு இடத்தைத்தான் தேர்வு செய்துள்ளார்.விடுதலைப்போர் குறித்த முக்கிய முடிவுகள் பல அங்குதான் எடுக்கப்பத்துள்ளன. அவரின் அறை மூடிவைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்களின் மீது அவ்வளவு நம்பிக்கை. அவர்பயன்படுத்திய மரப்பொருள்களும் கை ராட்டையும் அங்கு உள்ளன. நூலகம் ஒன்றும் உள்ளது காந்தியின் அனித்து நூல்களும் அங்கு விற்கப்படுகின்றன. பலவற்றை வணிகமாக்கிவிட்டனர் அங்கு. நீண்ட நாட்களாக்ப்பார்க்க எண்ணிய இடம் இப்போதுதான் வாய்த்தது அதுவும் அரசாங்கத்தின் புண்ணியத்தில்.விடுதலைப்போராட்ட்வீரர் கடலூர் அஞ்சலையம்மாளின் மகள் லீலாவதி என்கிற அம்மாக்கண்ணு இங்குதான் வளர்ந்தாராம். காந்தி அவரைச் சிறு வயதில் தமிழ்கத்திலிருந்து அழைத்து வந்தார் என அவரின் குடும்பத்தினர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காந்தியுடனிருக்கும் குழந்தைகளில் அவர் எந்த குழந்தையோ.  

Saturday, September 29, 2012

புதிய மதிப்பீட்டு முறை


கல்வித்துறையில் ஒரு அமைதிப்புரட்சி புதிய மதிப்பீட்டு முறை மூலம் ஏற்பட்டிருக்கிறது. அனாலும் இது இன்னும் செழுமைப்படுத்தப்படவேண்டும் இது குறித்து சுட்டி விகடன் கவனம் செலுத்தி வருகிறது அதற்கு முன்னோட்டமாக ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளனர் அதில் அடியேனின் சில எளிய கருத்துகளை வெளியிட்டுள்ளனர் அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த இடுகை. இது குறித்த மேலும் சில தகவல்கள் அடுத்தடுத்த இடுகைகளில்...

Saturday, September 1, 2012

விருத்தாசலம் பெரியார் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்.




விருத்தாசலம் நகராட்சியில் ஒரு முக்கிய புற நகர் பெரியார் நகர் ,நகரத்தின் முக்கிய நபர்களில் பலர் இந்த நகரில்தான் வசிக்கின்றனர். நகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருவதும் இந்த பெரியார் நகர்தான். இங்குதான் இந்த அவலம். பூதாமூர் துணைமின் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது தங்கம் நகர்,இது பெரியார் நகரின் விரிவாக்கம். இந்நகரில் அமைந்துள்ள முதன்மைச் சாலை, சிதம்பரம் சாலையையும் கடலூர் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மின்கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவரும் இச்சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். பல பள்ளி வாகனங்கள் தினமும் இச்சாலை வழியே செல்கின்றன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். இச்சாலைக்குத் தேவைப்படும் கூடுதல் இடத்தை 21.09.2010 அன்று முறையாக நகராட்சிக்கு தானமளித்து பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்பட்டது. இது பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள்,நகராட்சி ஆணையர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெற்றது. அதன் பிறகு சாலை விரிவக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.அதில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை, நடந்து செல்வோர் மீது  பீய்ச்சியடித்து நாள்தோறும் மக்களை கழிவுந்நீர்க் குளியலுக்கு ஆளாக்குகின்றன. மேலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நகரில் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர்மன்றத்தலைவரிடம் பல முறை சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. என்னதான் நடக்கிறது நகராட்சியில். இதற்கு விடிவுகாலமே இல்லையா? இன்னும் அடிப்படை வ்சதிகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிர்வாகமாகத்தான் இருக்கிறது விருத்தாசலம் நகராட்சி. வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை.