விருத்தாசலம் நகராட்சியில் ஒரு முக்கிய புற நகர் பெரியார் நகர் ,நகரத்தின் முக்கிய நபர்களில் பலர் இந்த நகரில்தான் வசிக்கின்றனர். நகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருவதும் இந்த பெரியார் நகர்தான். இங்குதான் இந்த அவலம். பூதாமூர் துணைமின் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது தங்கம் நகர்,இது பெரியார் நகரின் விரிவாக்கம். இந்நகரில் அமைந்துள்ள முதன்மைச் சாலை, சிதம்பரம் சாலையையும் கடலூர் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மின்கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவரும் இச்சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். பல பள்ளி வாகனங்கள் தினமும் இச்சாலை வழியே செல்கின்றன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். இச்சாலைக்குத் தேவைப்படும் கூடுதல் இடத்தை 21.09.2010 அன்று முறையாக நகராட்சிக்கு தானமளித்து பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்பட்டது. இது பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள்,நகராட்சி ஆணையர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெற்றது. அதன் பிறகு சாலை விரிவக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.அதில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை, நடந்து செல்வோர் மீது பீய்ச்சியடித்து நாள்தோறும் மக்களை கழிவுந்நீர்க் குளியலுக்கு ஆளாக்குகின்றன. மேலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நகரில் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர்மன்றத்தலைவரிடம் பல முறை சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. என்னதான் நடக்கிறது நகராட்சியில். இதற்கு விடிவுகாலமே இல்லையா? இன்னும் அடிப்படை வ்சதிகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிர்வாகமாகத்தான் இருக்கிறது விருத்தாசலம் நகராட்சி. வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை.
கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">

Saturday, September 1, 2012
விருத்தாசலம் பெரியார் நகரில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவலம்.
விருத்தாசலம் நகராட்சியில் ஒரு முக்கிய புற நகர் பெரியார் நகர் ,நகரத்தின் முக்கிய நபர்களில் பலர் இந்த நகரில்தான் வசிக்கின்றனர். நகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டித்தருவதும் இந்த பெரியார் நகர்தான். இங்குதான் இந்த அவலம். பூதாமூர் துணைமின் நிலையம் பின்புறம் அமைந்துள்ளது தங்கம் நகர்,இது பெரியார் நகரின் விரிவாக்கம். இந்நகரில் அமைந்துள்ள முதன்மைச் சாலை, சிதம்பரம் சாலையையும் கடலூர் சாலையையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். இச்சாலையில் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. மின்கட்டணம் செலுத்தும் மக்கள் அனைவரும் இச்சாலையைத்தான் பயன்படுத்துகின்றனர். பல பள்ளி வாகனங்கள் தினமும் இச்சாலை வழியே செல்கின்றன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் இச்சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். இச்சாலைக்குத் தேவைப்படும் கூடுதல் இடத்தை 21.09.2010 அன்று முறையாக நகராட்சிக்கு தானமளித்து பத்திரப் பதிவு செய்துகொடுக்கப்பட்டது. இது பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள்,நகராட்சி ஆணையர், நகராட்சி அலுவலர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நடைபெற்றது. அதன் பிறகு சாலை விரிவக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. அதனால் கழிவு நீர் சாலையில் வழிந்தோடுகிறது.அதில் செல்லும் வாகனங்கள் கழிவு நீரை, நடந்து செல்வோர் மீது பீய்ச்சியடித்து நாள்தோறும் மக்களை கழிவுந்நீர்க் குளியலுக்கு ஆளாக்குகின்றன. மேலும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நகரில் தொற்று நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகர்மன்றத்தலைவரிடம் பல முறை சொல்லியும் இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை. என்னதான் நடக்கிறது நகராட்சியில். இதற்கு விடிவுகாலமே இல்லையா? இன்னும் அடிப்படை வ்சதிகளைக்கூட நிறைவேற்ற இயலாத நிர்வாகமாகத்தான் இருக்கிறது விருத்தாசலம் நகராட்சி. வருமானத்திற்கு ஒன்றும் குறைவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
எவ்வளவோ பரவாயில்லை சார்... எங்கள் ஊரில் பல வருடங்களாக பலது இவ்வாறே உள்ளன...
ReplyDeleteஅருமையான பதிவு பதிவுக்கு நன்றி சார்
ReplyDelete