தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 20, 2023

மீண்டும் மிதிவண்டி


***
கீரனூர், கருவேப்பிலங்குறிச்சி, பள்ளிகளில் படித்த போது மிதிவண்டியில்தான் தினசரி செல்வோம். பேருந்து வராத நாட்களில் விருத்தாசலம் பள்ளிக்கும் மிதிவண்டியில் சென்றதுண்டு. தொழூர் பள்ளியில் பணியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் சைக்கிளில்தான் சென்றேன்.
மோட்டார் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய பிறகு சைக்கிள் துருப்பிடித்துப் போனது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்கி பல சவால்களில் பங்கேற்று வெற்றி பெற்றது ஊக்கம் அளித்து வருகிறது. "நாங்கள் சென்னை மிதிவண்டி குழுவில்" ( WCCG -  We are Chennai Cycling group) இணைந்து இரண்டு சவால்களில் கலந்து கொண்டோம். இதற்கு தூண்டியவர்கள் மருத்துவர்கள் நவீன், பார்த்திபன், விஜய் மற்றும் திரு. சுதாகர். ஐந்து பேரும் சேர்ந்து ஒரு மாதத்தில் 5000 கி.மீ. ஓட்ட வேண்டும். மற்றொரு சவால், பணி நிமித்தம் வெளியில் செல்லும்போது சைக்கிளில் செல்ல வேண்டும். கடைக்கோ நண்பர்களை சந்திக்கவோ அலுவலகத்திற்கோ செல்லும் போது மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக சைக்கிளைப் பயன்படுத்துவது. இது எனக்கு மிகவும் விருப்பமான சவாலாக இருந்தது. வீட்டிலிருந்து கடைகள் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளன. தினம் ஒரு முறையாவது கடைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கி.மீ. என்றால் ஓராண்டுக்கு 730 கி.மீ. ஓராண்டுக்கு 20 லி. பெட்ரோலை சேமிக்க வாய்ப்பு. எனவே இந்த சவாலில் கலந்துகொண்டு கடைகளுக்கு சைக்கிளில் செல்லத் தொடங்கியுள்ளேன். இதனைப் பாராட்டி சென்னை குழுவினரின் அன்பளிப்பு அழகான டி-சர்ட் மற்றும் நினைவுப் பரிசு. இவற்றை பொறுப்பாக அனுப்பி வைத்த சகோதரி பிரியங்கா அவர்களுக்கு நன்றி.
மீண்டும் மிதிவண்டி ஓட்டத் தொடங்குவோம் நம்மால் இயன்ற வரை சுற்றுச் சூழலை பாதுகாப்போம்.
நன்றி:WCCG
Pc:Dr.G.Sundaraselvan
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, Thiyaga Sekar and 79 others

No comments:

Post a Comment