தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 20, 2023

சைக்கிள் ஓட்டுவது

 

***
சைக்கிள் ஓட்டுவது என்பது
ஒவ்வொரு அதிகாலையிலும் புதிதாய் பிறப்பது
நாள்தோறும் வெவ்வேறு திசைகளில் பறப்பது
சாலையோர அழகுகளை அள்ளி விழுங்குவது
மேகத்தில் ஒளிந்திருக்கும்
ஆரஞ்சு பழம் போன்ற
சூரிய உதயத்தை
கண்டு களிப்பது
மயில்கள் உள்ளிட்ட
பறவைகளின் பாடல்களை கேட்டு மகிழ்வது
சாலையோர மரக்கிளை இடுக்குகளில்
சிந்தும் ஒளிச் சிதறல்களை
படம் பிடிப்பது
வெள்ளாற்றின் பாலத்தை கடப்பது
நீரில்லை என்றாலும்
மணலாவது கிடக்கிறதே
என்ற ஆறுதல் அடைவது
நீங்கள் ஊர்திகளில்
வழக்கமாக சென்ற சாலைதான்
சைக்கிளில் செல்லும்போது
புதிய அவதாரம் எடுக்கிறது
கார் ஓட்டுவதை போலவோ
பைக் ஓட்டுவதை போலவோ
அல்ல
சைக்கிள் ஓட்டுவது என்பது…
நலத்தோடு வாழ்வது
நன்றி: தமிழ்ப்பல்லவி

No comments:

Post a Comment