காலம்
பொன்போன்றது கடமை கண் போன்றது என்பது நம் முதுமொழி. காலத்தைப் பொன்னைவிடவும் மேலானதாகக் கருதியதன் விளைவாகவே இந்த பொன்மொழி தோன்றியிருக்கவேண்டும். நாம் எந்த ஒரு பொருளை இழந்தாலும் அதனை மீண்டும் பெற்றுவிடலாம். ஆனால் நாம் இழந்த காலத்தை மீண்டும் பெற இயலாது. காலம் தவறாமை என்பது இன்றும் வாழ்க்கை நெறியாக உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது.
எனவே மாணவர்கள் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டுமெனில் நேரத்தை எப்படி செலவிடுவது எனத் திட்டமிட்டுக் கொள்ள பழக வேண்டும். அதற்கு நேர மேலாண்மை குறித்த தெளிவு அவசியம்.
இப்போது தேர்வு நடைபெறும் நேரம் என்பதால்
நாம் நேரத்தை எவ்வாறு செலவிடலாம் என்பதைத் திட்டமிட்டுக்கொள்வது நல்லது. தேர்வுக்கு முன்னும் தேர்வு நேரத்திலும் எவ்வாறு நேரத்தை பகுத்து செல்விடவேண்டும் என்பதை நினைத்துப்பார்க்கவேண்டும்.
தேர்வுக்கு முதல் நாள்:
·
நாளை
எழுதப் போகும் தேர்வை கால அட்டவணையைப்பார்த்து உறுதிசெய்து கொள்ளவேண்டும்.
·
பாடம்
முழுவதும் படிக்க நேரமிருக்காது எனவே கடினப்பகுதிகள் அல்லது படிக்காமல் விட்ட பகுதிகளை மட்டும் ஒரு முறை பார்க்கலாம்.
·
காலை
5 மணிக்கு எழும் வழக்கமுள்ளவர்கள் ஒவ்வொரு மணித்துளிக்காகவும் திட்டமிட வேண்டும்.
·
சாப்பிட,
குளிக்க என நம் அன்றாட அடிப்படைத்தேவைகளுக்கான நேரத்தைக்கூட குறிப்பிட்ட அளவில் சரியாக செலவிடவேண்டும்.
·
பணத்தை
எப்படி கணக்காக செல்விட்டு அன்றைய செலவை கணக்கெழுதி சரிபார்க்கிறோமோ அதுபோல் அவ்வப்போது நாம் திட்டமிட்டபடிதான் நேரம் செலவாகிறதா என சரிபார்க்கவேண்டும். நம் கணக்கு சரியாக இல்லை எனில் அவற்றை அப்போதே சரி செய்திடவேண்டும்.
·
இவாறு
திட்டமிட்டால்தான்
தேர்வு நேர பதற்றமோ பரபரப்போ ஏற்படாது.
·
நம்
கடிகாரத்தை 10 நமிடம் அதிகமாக வைத்துக்கொள்ளவேண்டும் அது நம்மை கொஞ்சம் சுறுசுறுப்பாக்க உதவும்.
·
ஒவ்வொரு
மணியிலும் நமக்கான உதிரி நேரம் இருப்பது போல் திட்டமிடவேண்டும். ஒரு பணியை 10 நிமிடங்களில் செய்திடலாம் என்றால் நாம் 15 நிமிடங்களை அதற்காக ஒதுக்கிடவேண்டும். நம் கையில் 5 நிமிடம் மீதம் இருந்தால் பதற்றமில்லாமல் செலவிடலாம்.
தேர்வு
நாளன்று:
·
பள்ளிக்கு
கிளம்பும் நேரத்தை அவரவர் சூழலுக்கு ஏற்ப திட்டமிடவேண்டும்.
·
உள்ளூர்
பள்ளி எனில் காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினால் போதும்.
·
வெளியூர்
எனில் பயண நேரத்திற்கேற்ப கிளம்பலாம்.
·
பள்ளிப்பேருந்தில் பயணம்
செய்பவர்களுக்கு
எந்த சிக்கலும் இருக்காது. பொது போகுவரத்தைப் பயன்படுத்துபவர்கள் தேர்வு நாளன்று சொந்த வாகனத்தில் பெற்றோர் துணையோடு சென்றால் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
தேர்வு
அறையில்
·
தேர்வு
அறையில் தேர்வு எழுதுவதற்கான நேரம் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது என்பதை துண்டறிக்கையாக வாயிலில் ஒட்டி வைத்திருப்பார்கள் அதன்படி வினாத்தாள் படிக்க தாள் முதல்பக்கத்தை சரிபார்க்க கையொப்பமிட என ஒவ்வொரு செயலுக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது அவற்றை முறையாக பின்பற்றவேண்டும்.
·
விடை
எழுதத்தொடங்கிய
பிறகு அரை மணிநேரத்திற்கு ஒரு மணி ஒலிக்கும். அதற்கேற்ப நேரத்தைத்திட்டமிடுங்கள்.
·
மொத்தமுள்ள
நேரத்தை வினாத்தாளிலுள்ள மதிப்பெண்களால் வகுத்துக்கொள்வது சிறந்த முறையாக இருக்கும்.
·
கடினாமான
கணக்கோ மனப்பாடப்பகுதியோ உரிய நேரத்தில் நினைவுக்கு வரவில்லை எனில் அதை நினைத்துப்பார்ப்பதற்காக நேரத்தை வீணடிக்காமல் அடுத்த விடையை எழுதத்தொடங்கலாம்.பிறகு தானாக அது நினைவுக்கு வரும்.
·
100
மதிப்பெண்ணுக்கு 150 நிமிடங்கள் எனில் ஒரு மதிப்பெண்ணுக்கு ஒன்றரை நிமிடங்கள் என ஒதுக்கலாம். எழுதியதை சரிபார்க்கவேண்டுமெனில் ஒரு மதிப்பெண்ணுக்கு ஒரு நிமிடம் எனத்திட்டமிடலாம். இப்படி திட்டமிட்டால் சரிபார்ப்பதற்கு நேரமிருக்கும்.
நன்றி
: சுட்டிவிகடன்
No comments:
Post a Comment