தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, January 31, 2016

கானல் வரி கருத்தரங்கம் – 1 அறிவிப்பு            கானல்வரி,கற்க அறக்கட்டளை, அகிலா பதிப்பகம் இணைந்து நடத்தவிருக்கும் முதல் கருத்தரங்கிற்கு தங்களை அழைப்பதில் மகிழ்கிறோம்.
2016 மேத்திங்கள் 22 ஆம் நாள் விருத்தாசலத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கின் மையத்தலைப்பு  “தெருக்கூத்து”.  இத்தலைப்பை ஒட்டி கீழ்க்கண்ட  தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
1.தெருக்கூத்தின் வரலாறு
2.தெருக்கூத்துப்பாடல்கள்
3.தெருக்கூத்து ஒப்பனைமுறைகள்
4. தெருக்கூத்து நடிகர்கள்
5. தெருக்கூத்து ஆசிரியர்கள்
6. தெருக்கூத்துக்கான கதைகள்
7. தெருக்கூத்து இசைக்கருவிகள்
8. தெருக்கூத்தில் கட்டியக்காரர் பணிகள்
9. தெருக்கூத்து நுட்பங்கள் / உத்திகள்
10. தெருக்கூத்தின் அறிவுசார் பயன்கள்
மேற்கண்ட தலைப்புகளிலும் இதுபோல் தெருக்கூத்து சார்ந்த வேறு தலைப்புகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம்.
நாட்டுப்புறவியல் வல்லுநர் குழுவால் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் நூலாக்கப்பட்டு கருத்தரங்க நாளன்று வெளியிடப்படும்.
கட்டுரை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode font)  மட்டுமே தட்டச்சு செய்து word document ஆக kaanalvari2016@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு  கட்டுரையாளரின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 30/03/2016 தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
கானல் வரி:
ஒத்த சிந்தனையுடைய நாட்டுப்புறவியலாளர்கள், படைப்பாளர்கள் ஒன்று சேர்ந்து தொடங்கியுள்ள அமைப்பு. ஆண்டுக்கு ஒரு கருத்தரங்கு நடத்தி, அதில் அளிக்கப்படும் கட்டுரைகளை நூலாக வெளியிடுவது என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

கற்க:
விருத்தாசலத்தில் பிறந்து சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களால் தொடங்கப்பட்டுள்ள அறக்கட்டளை. சிறந்த நாட்டுப்புற கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி ரூ.10000/- பண முடிப்பு வழங்கி சிறப்பு செய்வது எனத்திட்டமிட்டுள்ளார்.
அகிலா பதிப்பகம்:
திரு. நரி அரி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் தொடங்கப்பட்டு சென்னையில் இயங்கி வரும் பதிப்பகம். கருத்தரங்கக் கட்டுரைகளை நூலாக வெளியிட இசைவளித்துள்ளார்.
கருத்தரங்க அமைப்பு:
  கருத்தரங்க நாளில் காலையில் கருத்தரங்கமும் மாலையில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் நடைபெறும். கருத்தரங்கில் கலந்துகொண்டு கட்டுரை வழங்குபவர்களுக்கு நினைவுப்பரிசு, சான்றிதழ், கருத்தரங்கில் வெளியிடப்படும் நூல் ஆகியன வழங்கப்படும். கருத்தரங்கில் கலந்துகொள்ள பதிவுக்கட்டணம் எதுவும் இல்லை.
கானல்வரிக் குழு:
முனைவர் எழிலவன்
முனைவர் பல்லவி குமார்
முனைவர் இரத்தின புகழேந்தி
முனைவர் நவஜோதி
முனைவர் செந்தில்குமார்
திருமதி வெற்றிச்செல்வி
ஓவியர் திரு.கோவிந்தன்
கவிஞர் தியாக ரமேஷ்
திரு ந.இரமேஷ்பாபு
திரு. ரொசாரியோ

தொடர்பு முகவரி:
இரத்தின புகழேந்தி
18, தங்கம் நகர்
பூதாமுர்
விருத்தாசலம் – 606001

கைபேசி:9944852295

1 comment:

  1. உங்களை முகநூல் வழியாக அறிந்து கொண்டேன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.நட்பு கொள்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.நானும் ஒரு ஆசிரியர்.

    ReplyDelete