தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, January 2, 2016

2015 கல்வித்துறையில் நடந்தது என்ன?



ஒவ்வோர் ஆண்டு நிறைவடையும்போதும் அந்த ஆண்டில் நடைபெற்ற பணிகளை மதிப்பிடுவது என்பது அடுத்து வரும் ஆண்டுகளில் செய்யவேண்டிய பணிகளுக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில் தமிழக அரசு கல்வித்துறையில் 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய ஆக்க்ப்பூர்வமான பணிகளையும் நிறைவேற்றத் தவறியவற்றையும் பார்க்கலாம்.
கல்வித்துறைக்கென எப்போதுமில்லாத அளவில் அதிக அளவாக நடப்பு ஐந்தாண்டு திட்டத்தில் 85422 கோடி ஒதுக்கியுள்ளது.
மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 1080 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்காக மட்டுமே (2015 ஆம் ஆண்டில் மட்டும்) ஒதுக்கப்பட்டுள்ளது. பாடநூலும் சீருடையும் மட்டும் வழங்கிய நிலையில் 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியவை.
கல்வித்துறையில் 52000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
13 விழுக்காடாக இருந்த மாணவர் இடைநிற்றல் விகிதம் 1.5 விழுக்காடாக்க்குறைக்கப்பட்டுள்ளது.
பல பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக சதுரங்க விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுவது மாணவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேர்வு முறையில் காலத்திற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடைத்தாள்களில் விரும்பத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இப்படி ஆக்கப்பூர்வ பணிகள் நடைபெற்றாலும் சில பின்னடைவுகளும் உள்ளன.
கல்வித்துறையில் காலியாக உள்ள 71ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்து இதுவரை 52 ஆயிரம் பணியிடங்களே நிரப்பப்பட்டுள்ளன. மீதி 19 ஆயிரம் பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளன.
ஆய்வக உதவியாளர் பணிக்கு கடந்த மே மாதம் தேர்வு நடத்தப்பட்டு இதுவரை பணியிடங்கள் நிரப்ப இயலாமல் போயிற்று. தெளிவான முடிவெடுக்காமையால் நீத்தித்துறையின் தீர்ப்புக்குக் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் நோக்கில் அவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் கன்னிமாரா நூலகத்தில் மின் மயமாக்கப்பட்ட அரிய நூல்களை பதிவேற்றம் செய்து தரப்படும் என அறிவித்தனர் அதுவும் இது வரை நடைமுறைக்கு வரவில்லை. பல கிராமப்புற மாணவர்கள் மடிக்கணினியைப் படம் பார்க்கவே பயன்படுத்துகின்றனர்.
பல பள்ளிகளில் பகுதி நேர விளையாட்டு, ஓவியம், கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வாரத்தில் 3 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதும் என அறிவித்தனர் . இது மிக மோசமான முன்னுதாரணமாக உள்ளது.
ஆண்டு தோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இது வரை பளிகள் தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இதுவரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டட வசதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
சாரண சாரணியர் இயக்கத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு அவர்களே முகம் கட்டணத் தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை அரசே ஏற்கலாம். கடந்த  3 ஆண்டுகளாக ஆளுநர் விருது பெறுவதற்கு தயாராக உள்ள மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லை.
மாணவர்களின் கழிவறைகளைகளை பராமரிப்பதற்காக 160 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அறிவித்தார் அந்த திட்டமும் நடை முறைக்கு வரவில்லை.
நன்றி: குங்குமச்சிமிழ் கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி


No comments:

Post a Comment