தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, January 13, 2010

இளவேனேல் பிறந்தநாள் விழா
என் மகன் இளவேனிலுக்கு இது 10 ஆவது பிறந்த நாள் விழா. பத்து வயது முடிந்து 11 வயது தொடங்குகிறது. என் அண்ணன் மகன் கார்க்கியும் அவன் நண்பன் ரெங்கனாதனும் பரிசுகளோடு வந்து பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். இளவேனில் என்ன சட்டை வேண்டும், என்ன இனிப்பு வேண்டும், கேக் எப்படி அமைய வேண்டும் என்பதையெல்லாம் முன்பே முடிவு செய்துவிட்டான்.அதன்படிதான் எல்லாம் நடந்தேறியது. குழந்தைகள் என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்றுவதுதானே பெற்றோரின் வேலை. அந்த வகையில் இளவேனிலுக்கு இது மகிழ்ச்சியான பிறந்த நாளாகக் கழிந்தது. இன்று அவன் எதிர்பார்த்தபடி யாரும் அவனைத் திட்டவில்லை. ஒரு நாளாவது அவனுக்கு படிப்பைப் பற்றி நினைக்காமல் இருப்பதற்கு இந்த பிறந்தநாள் உதவியது. தினமும் பிறந்த நாளாக இருக்கக் கூடாதா?...
என்ற ஏக்கத்தோடு தூங்கிப் போனான்.

5 comments:

 1. “இளவேனில்“
  அழகான பெயர்..
  இளவேனிலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
  இளவேனில் வாழ்வில் எண்ணியதெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 2. இளவேனேலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. GREETINGS TO ELAVENIL FROM NORWAY! HAPPY BIRTHDAY!

  ReplyDelete
 4. இளவேனிலுக்கு வாழ்த்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

  ReplyDelete