***
ஒவ்வொருவரையும் முழுமையான மனிதனாக்குவதில் ஆடைகளின் பங்கு இன்றியமையாதது.
நாம் அணிந்து கொள்ளும் ஆடை நமக்கு கம்பீரம் அளிப்பதாகவும் தன்னம்பிக்கை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தொடங்கிய நாளிலிருந்து அது தொடர்பான தகவல்களையும் படங்களையும் தேடித் தேடிப் பார்ப்பேன். பலரும் சிறப்பான சைக்ளிங் ஜெர்சி அணிந்திருப்பார்கள். நாமும் இதுபோல் அணியவேண்டும் என்று எண்ணி அதற்கான தேடுதலில், தேர்ந்தெடுப்பதில் நண்பர்களின் உதவியை நாடினால் அவர்களோ நம்மை மேலும் குழப்பி விடுவார்கள். இதற்கு சிறந்த தீர்வாக அண்மையில் கிடைத்தன ஒரு ஜெர்சியும் ஒரு டி சர்ட்டும் . வழங்கியவர்கள் கடலூர் ரைடர்ஸ் கம்யூனிட்டி. தரமான துணி, நேர்த்தியான வடிவமைப்பு, பொருத்தமான அளவு, சிறந்த தையல் அழகான நிறங்களின் கலவை என பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனர். பொதுவாக உடம்பின் அழுக்கு ஆடையில் ஒட்டிக் கொள்வது இரண்டு இடங்களில்தான் அவை கழுத்துப் பகுதியும் கைகளின் விளிம்புகளும்தான். அது வெள்ளை நிற ஆடையின் கம்பீரத்தைக் குறைத்து விடும். இவற்றை கவனத்தில் கொண்டு இதற்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் வழங்கிய வெள்ளை நிற டி சர்ட்டில் கழுத்து, கைகளின் விளிம்புகளில் நீல நிற துணியை வைத்து தைத்திருப்பது வடிவமைப்பாளர்களின் பட்டறிவுக்கு நற்சான்று. அது சட்டைக்கு மேலும் அழகூட்டுகிறது. இலைகள் அதிகப்படியாக உறிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்கு கண்ணுக்கு தெரியாத நுண்ணிய இலைத் துளைகளை இயற்கை வழங்கி உள்ளது. அது போலவே சைக்கிள் ஓட்டும் போது சுரக்கும் அதிகமான வியர்வையை வெளியேற்றும் வகையில் கண்ணுக்குத் தெரியாத நுண் துளைகள் இந்த ஆடைகளில் உண்டு. இதனை சிறப்பாக உருவாகிய ஆக்டிவ் பல்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கடலூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று எனது பக்கத்தையும் ஆடையையும் பெற்றுக் கொண்டு என்னிடம் வழங்கிய நண்பர் சித்த மருத்துவர் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி.
Thanks for Mr. Vijayakumar&team
Pc: Dr.G.Sundaraselvan
No comments:
Post a Comment