***
மருங்கூரில் இருந்தவரை உடல் உழைப்பு உற்பத்தி சார்ந்து இருந்தது. விருத்தாசலம் வந்து 22 ஆண்டுகளில் 21 ஆண்டுகள் நடைப்பயிற்சி மட்டுமே உடற்பயிற்சியாகிப் போனது. உற்பத்தி சார்ந்த உடல் உழைப்பிற்கு வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. நண்பர் பல்லவி குமார், பிரவீன் குமார், நாராயணசாமி, ரமேஷ் பாபு ஆகிய ரோடு அதிகாலை நடை பயிற்சி தொடர்ந்தது. சில மாதங்கள் நண்பர் ரொசாரியாவோடு புறவழிச் சாலையில் ஓட்ட பயிற்சி செய்து பார்த்தோம். சாலை நடை பயிற்சி பாதுகாப்பற்றதாக உணர்ந்த போது நகராட்சி பூங்காவுக்குள் நடக்கத் தொடங்கினோம் என்னோடு ரமேஷ் பாபு. ரோசாரியா ஏன நாங்கள் மூவர் அணியாக காலை மாலை நடந்தோம். பெருந்தொற்று காலத்தில் குழுவாக இணைந்து நடப்பது இலாமல் போகவே நண்பர் சுந்தரச் செல்வனோடு கூரைப்பேட்டை வயல்வெளி பாதையில் நடக்கத் தொடங்கினோம். இப்போது நண்பன் தடையம் பாபு மிதியுந்தில் செல்வதை பார்ப்போம். அவர் மிதிவண்டியின் மகத்துவத்தை தினமும் கூறிக் கொண்டிருப்பார். ஒரு நாள் விருத்தாசலம் மிதியுந்தாளர்கள் கழக நண்பர்கள் தலைக் கவசத்தோடு மிதிவண்டி ஓட்டி செல்வதை வேடிக்கையாக பார்த்தோம். ஆனந்த் சைக்கிள் ஸ்டோர் உரிமையாளர் உயர் வகை மிதியுந்து ஒன்றை ஓட்டி வந்தார். {(Highbreed cycle) தரையிலும் மலையிலும் ஓட்டுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது}.
அந்த மிதியுந்தை நானும் நண்பர் சுந்தரம் ஓட்டி பார்த்தோம். சரி நாமம் நடைபயிற்சிக்கு பதிலாக மிதியுந்து பயிற்சி செய்வோம் என்று முடிவு செய்து
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தொடங்கினோம். ஹெர்க்குலஸ் டர்போ டிரைவ் எம்.டி.பி. அரசகுழி வரை சென்றதே பெரும் சாகசமாக நினைத்துக்கொண்டோம். ஸ்ட்ராவா செயலியில் பயணங்களை பதிவு செய்ய கற்றுக்கொடுத்தனர் வி.டி.எம்.சி. நண்பர்கள். ஊத்தங்கால் வரை 19 கி.மீ. சென்றதை நீண்ட பயணம் என் வாழ்த்தியது ஸ்ட்ராவா. அடுத்த நீண்ட பயணமாக நண்பர் சீராளனுடன் நெய்வேலி சென்று வந்தோம். 27/12/2021 அன்று வடலூர் வரை சென்று வந்த 50 கி.மீ. பயணம் சாதனையாகத் தோன்றியது. எங்கள் பயணப்படங்களை ஸ்ட்ராவாவில் பார்த்து ஒரு வாழ்த்து காணொளியை பகிர்ந்து எங்கள் உள்ளம் கவர் நண்பரானார் ஜிப்மர் சி.எஸ்.கே.
டிசம்பர் 31 இல் வி.டி.எம்.சி. நண்பர்களோடு மிதியுந்து கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றதோடு மிதியுந்து சவால்களில் கலந்துகொள்ள தொடங்கினோம். சி.ஆர்.சி. நண்பர்கள் கடலூர் வெள்ளி கடற்கரையில் ஒரு விழாவை ஏற்பாடு செய்து எங்களுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அளித்து ஊக்கப்படுத்தினார்கள். அங்கு விதவிதமான மிதியுந்துகளைப் பார்த்து வியந்தோம். நண்பர் ரகுநாத் அவர்களை எல்லோரும் மேயர் என்று அழைத்தனர் ஏன் என்று விசாரித்தோம் அவர் எஸ்.ஆர். என்றனர். அப்படியென்றால் என்ன என்று வினவினோம். சூப்பர் ரேண்டனர் என்றனர். ஒரு ஆண்டில் 200,300,400,600 கி.மீ. பயணம் செய்தால் எஸ்.ஆர். ஆகலாம் என்றனர். நானும் எஸ்.ஆர். ஆவேன் என் உறுதியளித்தேன். ஆனால் இதுவரை ஆகவில்லை. மேயரின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணத்திட்டம் கொரோனாவால் நின்றுபோன கதையைக் கேட்டு வியப்புற்றோம். ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மிதியுந்தையும் அங்கு தான் பார்த்தோம். அதை பைக் என்றுதான் குறிப்பிட்டனர். நண்பர் விஜயகுமார் அவர்கள் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரிடமும் அன்போடு பழகிய விதம் என்னை மிகவும் கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து சி.ஆர்.சி. அறிவித்த சி.பி.எல். (சைக்ளிங் பிரிமியர் லீக்) சவாலில் கலந்து கொண்டோம். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டது. அதில் பஞ்சர் கிட் புஷ்பா குழு மிகவும் பிரபலமாகவும் வேடிக்கை யாகவும் ஆகிவிட்டது. அதற்கான நிறைவு விழா 26/01/2022 அன்று பெருமாள் ஏரிக்கரையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. நண்பர் விஜயகுமார் குழுவினர் இந்த விழாவையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பிப்ரவரி மாதத்தில் வி.டி.எம்.சி.யில் காதலர் நாள் சவால் 2022 அறிவித்தனர். 20 நாட்கள் ஒரு நாளைக்கு22 கி.மீ. ஓட்ட வேண்டும். அதன் நிறைவில் பாராட்டு சான்றிதழும் வெள்ளி காசும் பரிசளித்தனர். ஜெயின் சிறப்பு பள்ளியில் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மருத்துவர் விஜய், ஜெயின் பிரதீப் ஆகியோரின் முன்னெடுப்பில் குழுவினர் அனைவரின் ஒத்துழைப்போடு சிற்றுண்டி முதல் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக அமைந்ததுஇந்த விழாவுக்காக வி.டி.எம்.சி. இலச்சினையோடு வெள்ளை நிற டிஷர்ட் அணிந்து அனைவரும் கலந்து கொண்டோம் . இதன் பிறகு எங்கள் குழுவின் முதல் பெண் உறுப்பினராக இணைந்தார் வங்கியாளர் திருமதி நிவேதிதா. மிகுந்த நகைச்சுவை உணர்வுடையவர் அவரோடு இணைந்து பயணித்த நாட்கள் புன்னகைமாறா பயணங்களாகும்.புதிய பாதைகளில் பயணித்தோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பறந்தன எங்கள் வண்டிகள். ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதியன்று அதிகாலை 4.00 மணிக்கு புறப்பட்டு நண்பர் சீராளனோடு கங்கைகொண்ட சோழபுரம் சென்று வந்து முதல் நூறு கி.மீ. சவாலை நிறைவுசெய்தோம்.
அதன்பிறகு ஆற்றல் சவால் டெக்கத்லான் சவால் போன்ற பல்வேறு சவால்களில் பங்கேற்றோம். அதற்கான விழா வடலூரில் எளிமையாக நடைபெற்றது.
ஸ்ட்ராவாவில் 66 சவால்களில் வெற்றி பெற்று அதற்கான இணையவழி பதக்கங்களை பெற்றோம். இந்த மாதம் 16 ஆம் தேதி கடலூரில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொள்ள இயலாமல் போனது பெருத்த ஏமாற்றம். இதுபோன்ற மிதியுந்து குழுக்கள் தந்த ஊக்கமே ஓராண்டு பயணத்தை சாத்தியமாக்கியது. கடந்த ஓராண்டில் 278 நாட்கள் 6559 கி.மீ. பயணம் என்பது உடலுக்கும் மனத்துக்கும் புதுணர்வு அளிக்கிறது.உடல் எடை குறைந்து, கால்கள் வலுப்பெற்றுள்ளன. இந்த ஓராண்டில் எத்தனையோ அனுபவங்கள் புதிய நட்பு வட்டம் என மகிழ்வான மாற்றம் நிகழ்ந்தது. நீண்ட காலமாக ஓட்டிய நண்பர்கள் பலர் வண்டியை மறந்து விட்டனர். ஏனென்று தெரியவில்லை. வாருங்கள் நண்பர்களே இணைந்து பயணிப்போம்.
No comments:
Post a Comment