மகரந்தச்சேர்க்கை நூலுடன் இடமிருந்து மு.முருகேஷ்,கரிகாலன்,ஏ.பி.ராமன்,தியாக ரமேஷ்,ரமேஷ் சந்த்,விருத்தகிரி,ரமேஷ்பாபு,புகழேந்தி.
விழாவில் அம்ரந்திருக்கும் படைப்பாளிகள்
தெருக்கூத்துக்கலை கருத்தரங்கில் தலைமை உரையாற்றும் முனைவர் ஆறு.இராமநாதன், கட்டுரையாளர்கள் இடமிருந்து தியாக ரமேஷ்,பல்லவிகுமார்,புகழேந்தி,வெற்றிசெல்வி சண்முகம்,எழிலவன்,நவஜோதி,செந்தில்குமார்,இளங்கோவன்
சிறந்த கூத்துக்கலைஞர் விருது பெறும் கோவி.சடகோபன்
விருதுபெற்ற கலைஞர்களுடன் கற்க அறக்கட்டளை நிறுவனர் தியாக ரமேஷ்
விருது பெற்ற கலைஞர்களுடன் கானல்வரி குழுவினர்
கற்க
அறக்கட்டளையுடன்
கானல்வரி கலை இலக்கிய இயக்கம் இணைந்து கானல்வரி கலை இலக்கிய விழா விருத்தாசலத்தில் நடைபெற்றது. கவிஞர் தியாக ரமேஷ் எழுதிய மகரந்தச்சேர்க்கை கவிதை நூல் வெளியீட்டு விழா முனைவர் ஜெ.விருத்தகிரி தலைமையில் நடைபெற்றது. கவிஞர் பல்லவி குமார் அனைவரையும் வரவேற்றார். தங்கபாண்டியன்,ரமேஷ்பாபு,ரொசாரியோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிங்கப்பூர் பத்திரிகையாளர் ஏ.பி.ராமன் நூலை வெளியிட ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த் பெற்றுக்கொண்டார். கவிஞர் மு.முருகேஷ் நூலைத் திறனாய்வு செய்தார். எழுத்தாளர் இமயம்,கவிஞர் கரிகாலன்,கவிஞர் கண்மணி குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத்தொடர்ந்து தெருக்கூத்துக்கலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக மொழிப்புலதின் முன்னாள் முதன்மையர் பேராசிரியர் முனைவர் ஆறு.இராமநாதன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் எழிலவன்,முனைவர் பல்லவிகுமார்,முனைவர் நவஜோதி,முனைவர் மு.இளங்கோவன், முனைவர் செந்தில்குமார், கவி.வெற்றிச்செல்வி,முனைவர் ரத்தின.புகழெந்தி ஆகியோர் வெவேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை வழங்கினர்.
பிற்பகல் கற்க அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் தியாக ரமேஷ் அவர்களால் நிறுவப்பட்ட கானல்வரி கலை விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த தெருகூத்துக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. குறவன்குப்பம் கோவி.சடகோபன் அவர்களுக்கு சிறந்த தெருக்கூத்துக்கலைஞர் விருதினையும் பத்தாயிரம் ரூபாய் பொற்கிழியையும் வாழப்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் ப.சி.செல்வம் வழங்கினார். சிறந்த தெருக்கூத்து இளம் கலைஞர் விருதும் ஐயாயிரம் ரூபாய் பொற்கிழியும் களர்குப்பம் சங்கருக்கு தொழிலதிபர் தியாக பாபு வழங்கினார்.
ரத்தின
புகழேந்தி அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment