கள்ளிப் பல்வித்துறையில் சோவைத்தணிக்கை ( நன்றி லூசுப்பையன்) என்றொரு தணிக்கை முறை உள்ளது. ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் ஓய்வு பெறுவதற்கு முன் இந்த தணிக்கை முடியவேண்டும். அவ்வாறு ஒரு அலுவலர் ஓய்வு பெற்றார். அவர் பணிக்காலம் இரண்டு ஆண்டுகள். அந்த கால கட்டத்தில் அரசின் மூலம் கிடைத்த தொகை ஆண்டுக்கு 4000 என இரு ஆண்டுகளுக்கும் 8000. இந்த தொகையைத் தணிக்கை செய்வதற்காக வரும் தணிக்கையாளருக்கு ஓர் ஆண்டுக்கு 3000 ஆயிரம் என 6000 ஆயிரம் தரவேண்டுமாம். அது சிறிய அலுவலகம் என்பதால் அந்த சலுகையாம். பெரிதென்றால் தொகையும் அப்படியே..
சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒரு மணிநேரத்தில் தணிக்கை முடிந்தது. பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு கிளம்பிவிட்டார். வெற்றிகரமாக தணிக்கை முடிந்தது. 2 மாதங்கள் கழித்து தணிக்கை அறிக்கை வந்தது. அதில் ஒன்றும் தணிக்கைத்தடை இருக்க வாய்ப்பில்லை என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை அரசு பணத்திற்கான வட்டித்தொகை ரூ.10 எடுத்து செல்விடப்பட்டது தவறு அதனை அரசு கணக்கில் செலுத்த்வேண்டும் என்று குறிப்பு எழுதியுள்ளார். மிகப்பெரிய தவறு நடந்துவிட்டதே அரசு பணத்தை அரசு கணக்கில் செலுத்திவிடலாம் என்று எண்ணியிருந்த வேளையில் அருகிலுள்ள உயர் அலுவலரிடமிருந்து அறிவிப்பு ஒன்று வந்தது. இந்த தேதிக்குள் தணிக்கைத் தடைகளை சரி செய்து விவரங்களை உரிய படிவத்தில் 2 நகல்களில் ஒப்படைக்கவேண்டும் என்று. அடித்து பிடித்துக்கொண்டு அதற்கான செலுத்துச் சீட்டினைப் பெற்று (அதைப் பெற்று கணக்குத் தலைப்பினை தெரிந்து கொள்ள 2 நாட்கள் ஆனது) வங்கிக்கு சென்று கால் கடுக்க வரிசையில் நின்று 10 ரூபாய் அரசு பணத்தை அரசின் கணக்கில் செலுத்திவிட்டு அந்த செலுத்து சீட்டு, படிவம், தணிக்கை அறிக்கை இவ்வளவையும் இரு நகல் எடுத்து படிவத்தை நிரப்பி அலுவலகத்தில் ஒப்படைப்பதற்குள் போதும் ..போதும்.. என்றானது. 10 ரூபாயை திருப்பி செலுத்த ஆன செலவு 50ரூபாய். கொளத்தங்கிறிச்சி தாத்தா சொன்ன பழமொழிக்கு இப்போதான் பொருள் விளங்கியது. “வெடுப்புல உழுந்தது கார்ரூவா வெட்டியெடுத்தது முக்கார்ரூவா”
இதவிட ஒரு கேலிக்கூத்து எழுது பொருளுக்காக ஒரு ஆண்டுக்கு 75 ரூவா கொடுப்பாங்க அத வாங்குறதுக்கு எவ்வளவு செலவு ஆகும்னு நினைக்கிறீங்க. முழிக்க வேண்டாம் 100 ரூவாதான் ஆகும்.
இதையெல்லாம் மாத்தவே முடியாதா?
கொஞ்சம் யோசிங்க அதிகாரிகளே!
அரசுகணக்கிலே திருப்பி செலுத்துவதில் 100 ரூபாய் வரைக்குமாவது விலக்கு அளிக்கக் கூடாதா?
எழுதுவதையே அன்றாடம் தொழிலாகக் கொண்ட அலுவலகங்களுக்காவது 1000 ரூபாய் கொடுக்கக் கூடாதா?
No comments:
Post a Comment