தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 26, 2012

பிணத்தை உண்பவன்



பூமிக்குள் புதைக்கப்பட்ட
நம் மூதாதையர்
ஒருவரைப் போல்
காட்சியளிக்கிறது
மண்ணுக்குள்ளிருந்து
தோண்டியெடுக்கப்பட்ட
சக்கரைவள்ளிக்கிழங்கு

தணலுக்குள் 
நுழைத்து வைத்து
மறுநாள் 
எடுத்துப் பார்க்கிறேன்

வெந்து சுருங்கிய உடலை
என் கோரைப் பற்கள்
நீண்டு வெளிவர
பிய்த்து உண்கிறேன்

எனக்கு மிகவும் விருப்பமான
என் மூதாதையரின்
வெந்த பிணத்தை.

7 comments:

  1. mikavum arumaiyaana kavidhai sir ! ungalin varigalil migavum pudhu paaniyaka indha kavidhai irukkiradhu. arumai..... arumai...... arumai.....

    ReplyDelete
  2. ஆழமான வித்தியாசமான சிந்தனை
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அற்புதமான வரிகள் சிந்தனை சிறப்பு .

    ReplyDelete
  4. வியக்க வைத்த கவியாக்கம் முனைவரே.

    என்ன செய்ய? நம் வாரிசுகளுக்கு தான் ‘இப்பிணங்களை’ தின்னு வளரும் பாக்கியம் கிட்டாமல் ‘பிஸ்ஸா’ ‘பர்கர்’ ஊட்டி வளர்க்கிறோம்.

    ReplyDelete
  5. பின்னூட்டமிட்ட முருகன்,வலையகம், திரு ரமணி, சகோ.சசிகலா,திண்டுக்கல் தனபாலன், சத்ரியன் ஆகியோருக்கு நன்றிகள் பல...

    ReplyDelete
  6. கிழங்கு கெடைக்காத ஊரில எச்சில் ஊற வைச்சிட்டிங்க...எழுத எத்தனையோ உள்ளது...முடிந்தால் நம்ம வலைபூக்கும் வந்து போங்க...http://tamilmottu.blogspot.in/

    ReplyDelete