தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Sunday, May 27, 2012

நிரல்

நாட்டின் எதிர்காலத்தை
கைகளில் ஏந்தி
வரிசையில் நின்றனர் குழந்தைகள்
சத்துணவு கூடத்தின் முன்

சுகாதர நிலையங்களில்
நோயாளிகளின் வரிசை

ரசிகர்கள் கூட்டம்
இப்போது குறைவுதான்
திரையரங்க வரிசையில்

முன் பதிவுக்குக் காத்து நிற்கிறது
பயணிகளின் வரிசை

வளைந்து நெளிகிறது
ரேஷன் கடை வரிசை

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமின்றி
அவ்வப்போது தோன்றும்
வாக்காளர் வரிசை

பொங்கல் தோறும்
விலையில்லா வேட்டி சேலைக்கு நிற்கிறது
ஏழைகள் வரிசை

இந்நாட்டு மன்னர்களெல்லாம்
ஏதோ ஒரு
வரிசையில் நிற்க

எதிர்கால மன்னர்களோ
கைரேகைப் பதிவிற்காக
காத்து நிற்கின்றனர்
அமெரிக்க தூதரகத்தின்
நீண்ட வரிசையில்.

1 comment:

  1. அதிகார வர்க்கத்தையும், தொழிற்பேட்டையாகிப்போன அரசியல் களத்தையும் எதிர்க்கும் குணத்தை அடியோடு விட்டுவிட்டோம். என் குடும்பம் என் வாழ்க்கை என்னும் தனிமனித தத்துவத்தில் மூழ்கிவிட்டோம்.

    எதிர்கால மன்னர்கள் அயல்நாடு பறப்பதே இந்நாட்டு வாரிசு மன்னர்களுக்கு கப்பம் கட்டத்தானே!

    ReplyDelete