2009இல் நான் எழுதிய சிறுகதை "தாகம்" நண்பர் வீரமணி ஆழி இதழுக்காக அனுப்பியது. அப்போது வெளியாகவில்லை. அவர் இப்போது நிலாப் பெண்ணே இதழின் பொறுப்பாசிரியர். இப்போது அக்கதையை வெளியிட்டுள்ளார். நண்பர் முத்துவேல் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுத்தார் அவருக்கும் வெளியிட்ட வீரமணிக்கும் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">

Sunday, September 18, 2011
நிலாப்பெண்ணே இதழில் தாகம் சிறுகதை
2009இல் நான் எழுதிய சிறுகதை "தாகம்" நண்பர் வீரமணி ஆழி இதழுக்காக அனுப்பியது. அப்போது வெளியாகவில்லை. அவர் இப்போது நிலாப் பெண்ணே இதழின் பொறுப்பாசிரியர். இப்போது அக்கதையை வெளியிட்டுள்ளார். நண்பர் முத்துவேல் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுத்தார் அவருக்கும் வெளியிட்ட வீரமணிக்கும் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.
Friday, September 16, 2011
விளிம்பு நிலைப் படைப்பாளி - 10
தியாக. ரமேஷ்
கடலூர் மாவட்டம் கணபதி குறிச்சியில் 1968 ஆம் ஆண்டு தியாகராஜன் ஞானசௌந்தரி இணையருக்குப் பிறந்த தியாக ரமேஷ் பள்ளிக்கல்வியை நல்லூர் விருத்தாசலம் பள்ளிகளில் பயின்றார். பட்டயப்படிப்பினை சேலம் தொழில்நுட்பக்கல்லூரியில் முடித்து பல்வேறு நிறுவனங்களில் பொறியாளராகப் பணியாற்றி தற்போது சிங்கப்பூர் ரோட்டரி நிறுவனத்தில் வடிமைப்புப் பொறியாளராகப் பணியாற்றிவருகிறார்.
சேலத்தில கல்லூரியில் படிக்கின்றபோது சேலம் சூழலுமும் இயற்கை எழிலும் ரமேஷை படைப்பாளியாக உருவாக்கின. இயற்கையை நேசிக்கும் குணமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் மனமும் இவரது தனித்தன்மைகள்.கவிதை, இலக்கியம், ஆன்மீகம், விளையாட்டு, பயணம், சித்தமருத்துவம் போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். ஓவியம் வரைவது இவரது பொழுதுபோக்கு.
கவிதை, படைப்பாளியையும் அவன் சார்ந்தவற்றையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. நாம் எப்பொதெல்லாம் கவிதை எழுதுகிறோமோ அப்போதெல்லாம் நம்மோடு நாம் பொருந்தி இருக்கிறோம். என்று கவிதை குறித்த மதிப்பீடு உடைய ரமேஷ் இரண்டு கவிதை நூல்களைப் படைத்துள்ளார்.
தமிழகத்தின் மணிமுத்தாறு, நடவு, களம்புதிது, ஆகிய இலக்கிய இதழ்களிலும் சிங்கப்பூரின் தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ், தங்கமீன் இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன .
2004 ஆம் ஆண்டு வெளியான நூல் " அப்படியே இருந்திருக்கலாம் " இந்நூல் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
"நினைவுப்பருக்கைகள்" என்னும் கவிதை நூலினை இவ்வாண்டு சிங்கப்பூரில் வெளியிட்டார்.சிங்கப்பூரில் இயங்கி வரும் கவிமாலை, கவிச்சோலை, இலக்கியச்சோலை, போன்ற இலக்கிய அமைப்புகளில் தொடர்ச்சியாகப் பங்கேற்று வரும் இவர் தி சிராங்கூன் டைம்ஸ் என்னும் தமிழ் மாத இதழில் நிருபராக பணிய்யாற்றினார். தற்போது அவ்விதழ் இணைய இதழாக வெளிவருகிறது.சிங்கப்பூரில் நடபெறும் இலக்கிய நிகழ்வுகளை ஒளிப்படங்களாக இணையத்தில் ஆவணப்படுத்தி வரும் இவர் முகநூல், வலைப்பூ வாயிலாகவும் இலக்கியப் பணியாற்றி வருகிறார். இவரது சிறப்பான இலக்கிய முயற்சிகளை அங்கிகரிக்கும் வகையில் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் செயலவை உறுப்பினராக்கி பெறுமைப்படுத்தியுள்ளது.
அண்மையில் சீன நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று வந்த கவிஞர் சீனர்களின் பண்பாடுகளைப் படம்பிடித்து வந்துள்ளார். அப்படங்களை பிக்காசா இணைய ஆல்பத்தில் பார்க்கலாம்.
தியாக ரமேஷின் கவிதைகள் வட்டார மொழியிலமைந்தவை. எளிதில் புரியும் நேரடித்தன்மை கொண்டவை. வாழ்வனுபவங்களின் வெளிப்பாடாகவும். மனிததின் மீது கொண்ட அன்பாலும் இயற்கையின் மீது கொண்ட ஈர்ப்பாலும் உறுவானவை.
தியாக ரமேஷ் நூல்கள்
1.அப்படியே இருந்திருக்கலாம்
2.நினைவுப்பருக்கைகள்
இணைய இலக்கியங்கள்
Wednesday, September 7, 2011
Subscribe to:
Posts (Atom)