திருக்குறள் பலகை திறப்பு விழா
திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் கிராமத்து விளையாட்டுகள் நூலுக்கு திறனாய்வுக்கூட்டம் 22.02.2009 அன்று நடைபெற்றது.தலைமை; வாசுதேவன், முன்னிலை;ஆகாசு.முத்துக்கிருட்டிணன், வேணுகோபால்,விசுவனாதன், வரவேற்புரை;இளங்கோ,நூல் திரனாய்வு செய்தவர் இரமாதேவி. வாழ்த்துரை;ஆனந்த்,சக்திவேல்.இணைப்புரை;சிவராமன். சிறப்பு ஆலோசனை; கவிஞர் தமிழியலன்.காலையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு திருக்குறள் பலகைத் திறப்பு விழாவிலும் பங்கேற்றேன். மாலை தமிழ் ஒளி இயக்கம் கலந்தாய்வுக்கூட்டத்தில் ஈழத்தமிழர் சிக்கல் குறித்து விவாதித்தோம். இரவு பேராசிரியர் நெடுஞ்செழியன் வீட்டில் நடைபெற்ற முச்சந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நண்பர்கள் அசோக் உடன் சாந்தகுமார் இல்லம் சென்று வீடு திரும்பினோம். நண்பர் சிவராமன் திருவண்ணாமலையைச் சுற்றிக்காண்பித்தார்.வாழ்க்கையில் முதல் முறையாக திருவண்ணாமலை சென்று வந்தது மன நிறைவைத் தந்தது.
புகழ்!
ReplyDeleteநிகழ்வுகளை விடுபடாமல்
பதிவு செய்யும் தங்களின்
எழுத்துப் பணி.....
பிற்காலத்தில் நல்ல பயன் தரும்
தமிழ் இயலன்