தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Saturday, May 20, 2023

ஆள் பாதி ஆடை பாதி


***
ஒவ்வொருவரையும் முழுமையான மனிதனாக்குவதில் ஆடைகளின் பங்கு இன்றியமையாதது.
நாம் அணிந்து கொள்ளும் ஆடை நமக்கு கம்பீரம் அளிப்பதாகவும் தன்னம்பிக்கை தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தொடங்கிய நாளிலிருந்து அது தொடர்பான தகவல்களையும் படங்களையும் தேடித் தேடிப் பார்ப்பேன். பலரும் சிறப்பான சைக்ளிங் ஜெர்சி அணிந்திருப்பார்கள். நாமும் இதுபோல் அணியவேண்டும் என்று எண்ணி அதற்கான தேடுதலில், தேர்ந்தெடுப்பதில் நண்பர்களின் உதவியை நாடினால் அவர்களோ நம்மை மேலும் குழப்பி விடுவார்கள். இதற்கு சிறந்த தீர்வாக அண்மையில் கிடைத்தன ஒரு ஜெர்சியும் ஒரு டி சர்ட்டும் . வழங்கியவர்கள் கடலூர் ரைடர்ஸ் கம்யூனிட்டி. தரமான துணி, நேர்த்தியான வடிவமைப்பு, பொருத்தமான அளவு, சிறந்த தையல் அழகான நிறங்களின் கலவை என பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளனர். பொதுவாக உடம்பின் அழுக்கு ஆடையில் ஒட்டிக் கொள்வது இரண்டு இடங்களில்தான் அவை கழுத்துப் பகுதியும் கைகளின் விளிம்புகளும்தான். அது வெள்ளை நிற ஆடையின் கம்பீரத்தைக் குறைத்து விடும். இவற்றை கவனத்தில் கொண்டு இதற்கு தீர்வு காணும் வகையில் அண்மையில் வழங்கிய வெள்ளை நிற டி சர்ட்டில் கழுத்து, கைகளின் விளிம்புகளில் நீல நிற துணியை வைத்து தைத்திருப்பது வடிவமைப்பாளர்களின் பட்டறிவுக்கு நற்சான்று. அது சட்டைக்கு மேலும் அழகூட்டுகிறது. இலைகள் அதிகப்படியாக உறிஞ்சிய நீரை வெளியேற்றுவதற்கு கண்ணுக்கு தெரியாத நுண்ணிய இலைத் துளைகளை இயற்கை வழங்கி உள்ளது. அது போலவே சைக்கிள் ஓட்டும் போது சுரக்கும் அதிகமான வியர்வையை வெளியேற்றும் வகையில் கண்ணுக்குத் தெரியாத நுண் துளைகள் இந்த ஆடைகளில் உண்டு. இதனை சிறப்பாக உருவாகிய ஆக்டிவ் பல்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுகள்.
கடலூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று எனது பக்கத்தையும் ஆடையையும் பெற்றுக் கொண்டு என்னிடம் வழங்கிய நண்பர் சித்த மருத்துவர் பார்த்திபன் அவர்களுக்கு நன்றி.
Thanks for Mr. Vijayakumar&team
Pc: Dr.G.Sundaraselvan
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, Thanga Velmurugan and 161 others

முதல் ஜெர்சி

 

***
சைக்கிள் ஓட்டத்தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை சைக்ளிங் ஜெர்சி அணிந்ததில்லை. இன்று கடலூர் ரைடர்ஸ் கம்யூனிட்டி வெளியிட்ட முதல் ஜெர்சியை விருத்தாசலம் நெய்வேலி நண்பர்களுடன் பெற்றுக் கொண்டோம். மருத்துவர் பார்த்திபன் அறிவியலாளர் முனைவர் மணிவண்ணன் ஆகியோருடன் நிகழ்வில் கலந்துகொண்டேன். பல புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. கடலூர் விஜயகுமார் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, Pallavi Kumar and 118 others

ஆற்றல் பதக்கம்


***
சென்னையில் கடந்த சூலை மாதம் நடைபெற்ற ஆற்றல் சவாலில் பங்கேற்றதற்கான பதக்கம் வழங்கும் விழாவில் பங்கேற்க இயலாமல் போனதால் இன்று வடலூர் சந்திப்பில் நண்பர் விஜயகுமார் எனக்கான பதக்கத்தைக் கொண்டு வந்தார். தேநீர் விருந்தில் எனது நண்பரும் என்னோடு அறிவொளி இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவரும் திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளருமான முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களை பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தோம். பதக்கத்தை அவர் அணிவித்தார். உடன் விருத்தாசலம் நண்பர்கள் மருத்துவர்கள் விஜய், பார்த்திபன்.
நன்றி: திரு.விஜயகுமார்.
No photo description available.
See Insights and Ads
All reactions:
Pa U Thendral, மெய்யறிவன் மெய்யறிவன் and 134 others