தமிழ்நாட்டின் தொன்மையான தோலிசைக்கருவி பறை எனப்படும் தப்பு ஆகும். பறை பற்றிய தகவல்கள் தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ளன. ஐவகை நிலங்களிலும் ஐந்து வகையான பறை இசைக்கப்பட்டமைக்கான குறிப்புகள் காணப்படுகின்றன. தொல்காப்பியம்,நன்னூல் போன்ற இலக்கண நூல்களிலும் புறநானூறு ,சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, தேவாரம் போன்ற இலக்கிய நூல்களிலும் பறை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
. 'பேசு' எனப்பொருள்படும் 'அறை' என்ற சொல்லினின்று 'பறை' தோன்றியது. பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி பறை. அது மட்டுமல்ல
பறை என்பது இசைக்கு நடை கற்பிக்கும் கருவி என்பார் முனைவர் வளர்மதி. இத்தகைய தொன்மையான ஓர் இசைக்கருவி தமிழக சிற்றூர்களில் வாழ்வியல் சடங்குகளிலும்
கோயில் திருவிழாக்களிலும் இசைக்கப்பட்டது. தொன்மையான இந்த இசைக்கலையில் இன்று நவீன
உத்திகளைக் கையாண்டு கலை இலக்கிய அரசியல் மேடைகளில் இசைக்க வல்ல தப்பாட்டமாக பரிணாம
வளர்ச்சி பெற்றுள்ளது.
திரைப்படங்களிலும் பறை பல்வேறு சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே கொரியாவில் மேள நடனம் என்பது ஒரு மரபுக் கலையாக நிகழ்த்தப்படுகிறது. கொரியாவில் மேளம் இசைக்கும் வழக்கம் மூவேந்தர்கள் (Goguryeo , Baekje, Silla) காலமான
கி.மு.57 இலிருந்து உள்ளதாக அறியப்படுகிறது. சுமார் 18 வகை மேளங்கள் கொரிய இசைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பக்(
Buk) , ஜங்கு (Janggu), கல்கோ (Galgo),ஜிங்கோ( Jingo), ஜியோல்கோ(Jeolgo), ஜ்வாகோ( Jwago),ஜியோங்கோ
( Geongo),யோங்கோ( Yonggo), யுங்கோ(Eunggo),சக்கோ (Sakgo),கியோபங்கோ(
Gyobanggo), ஜங்கோ(Junggo),சோகோ
(Sogo),நோகோ( Nogo), நோடோ(Nodo), யோங்டோ(Yeongdo), நொய்டோ( Noedo), நோய்கோ( Noego)
இவற்றுள் பக் எனப்படும் மேள நடனம் தமிழக தப்பாட்டத்தோடு ஒப்பிட்டு
ஆய்வு செய்யப்படுகிறது.
தமிழகப்
பறையும் கொரிய மேளமும் வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும் இசைஒலி, ஆட்ட அடவுகள் ஓசை நயம் எனப் பல்வேறு ஒற்றுமைகள் இவ்விரு நடனங்களுக்கிடையில் அமைந்துள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
பறை
அறிமுகம்:
பறை
என்னும் இசைக்கருவியே மக்களால் தப்பு என்று அழைக்கப்படுகிறது. தப்புதல் என்றால் அடித்தல் என்று பொருள் அடித்து இசைக்கும் கருவி என்பதால் தப்பு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
அனிச்சப்பூக் கால்களையாள்
பெய்தாள்
நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை
நல்ல படாஅ பறை
என்று
வள்ளுவர் குறிப்பிடுவார்.
பறைகளில் பல வகை உண்டு 12 வகையான பறையை புற நானுறு வரிசைப்படுத்துகிறது, அவைகள்
இதோ
அரிப்பரை, அனந்தன் பறை, ஆகுளிபறை, சிறு பறை, சல்லிப்பறை,
அரிப்பரை, அனந்தன் பறை, ஆகுளிபறை, சிறு பறை, சல்லிப்பறை,
சாக்காட்டுப்பறை, செருப்பறை, போர்ப்பறை, நெய்தல் பறை,
தடாரிப்பறை, ஒரு
கண் பறை, மணப்பறை.
இது தவிர 5
வகை நிலங்களுக்கும் ஐ வகைப் பறைகள் இருந்துள்ளன.
தொண்டகப்பறை(குறிஞ்சி),துடிப்பறை (பாலை),ஏறுகோட்பறை
(முல்லை) மணப்பறை (மருதம்), மீன்கோட்பறை (நெய்தல்)
பறை
உருவாக்கம்:
பறை
செய்வதற்கு முதலில் பலா மரத்தில் வட்ட வடிவக் கட்டை செய்யப்படுகிறது. அதன் பிறகு மாட்டுத்தோலைப் பதப் படுத்தி புளியங்கொட்டையை அரைத்து பசை தயாரித்து பதப்படுத்திய தோலை மரக்கட்டையில் ஒட்டிவிடவேண்டும். பறையை அடிக்கும் குச்சிகளுக்கு
அடிக்குச்சி, சிண்டுக்குச்சி, என்று பெயர். இவை வேம்பு, கொய்யா, பூவரசு போன்ற மரத்தில் இந்தக்
குச்சிகளைத் தயாரிப்பார்கள்.
பறையாட்டம்
(அ)
தப்பாட்டம்:
பறை
மூவேந்தர்கள் காலத்தில் மன்னர்களின் அறிவிப்புகளை முரசு அரைந்தோ அல்லது பறையடித்தோ தெரிவிப்பது வழக்கம். மேலும் பல்வேறு சூழல்களில் பறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மன்னன் எதிரிநாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத
மக்களை வெளியேற்ற வேண்டி, பெருகிவரும் புனலை அடைக்க,உழவர் மக்களை அழைக்க,
போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட,
வெற்றி தோல்வியை
அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க,
விதைக்க,அறுவடை செய்ய,காடுகளில்
விலங்குகளை விரட்ட,மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க,
இயற்கை வழிபாட்டில்,கூத்துகளில்,விழாக்களில், இறப்பில்
எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் ‘பறை’ இணைந்து இயங்கியுள்ளதற்கான
ஆதாரங்கள் உள்ளன. மேற்கண்ட தேவைகள் குறைந்த போது பறை ஓர் இசைக்
கருவியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. பறை இசைத்தவர்கள் பறையர் என
அழைக்கப்பட்டனர். பறையர் என்பது
தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்ட பெயர். பறை என்பது பேரிகை. பழங்காலத்தில் நமது அரசர்கள்
போர் செய்யப்போகும்போது ஜயபேரிகை கொட்டிச் செல்லும் தொழிலை பறையர் செய்து வந்தபடியால்
பறையர்களுக்கு இப்பெயர் வழங்குவதாயிற்று என்று மகாகவி பாரதியார் குறிப்பிடுகிறார்.
புறநானூறும் இதனை கீழ்க்கண்ட பாடல் வழி உறுதிப்படுத்துகிறது.
துடியன், பாணன், பறையன், கடம்பன்,
என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;(புறம் 335)
இன்று தப்பாட்டம்
கலை இலக்கிய அரசியல் மேடைகளில் ஆடப்படுகிறது. அதற்கென பயிற்சி பெற்ற கலைக்குழுக்கள் தமிழகமெங்கும் உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர்,
மதுரை ஆகிய நகரங்களில் குறிப்பிட்த்தகுந்த தப்பாட்டக் குழுக்கள் உள்ளன.
ஒரு தப்பாட்டக்குழு
குறைந்த்து எட்டு நபர்களைக்கொண்டுள்ளது. ஒருவர் பெரிய மேளத்தை இசைப்பார், இன்னொருவர்
ஜால்ரா இசைப்பார், மற்ற ஆறு பேரும் தப்பு இசைப்பார்கள்.
தப்பாட்ட
அடவுகள்:
அடவு என்பது ஆடப்படும் கலைகளுக்கு உயிர்நாடி போன்றதொரு ஆதார உறுப்பு ஆகும்.
ஓர் ஆட்டத்தின் அடவுகளை ஆய்வு செய்யும்போது கால்களின் வைப்பு முறை,
கைகளின் வைப்பு நிலை, உடலின் இருப்பு ஆகிய இம்மூன்று கூறுகளையும் உடன்
இணைத்துப்பார்க்கவேண்டும் என்பார் முனைவர் கு.முருகேசன். அந்த அடிப்படையில்
தப்பாட்ட அடவுகள் இங்கு கூர்ந்து நோக்கி ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தப்பாட்டத்திற்கென பல்வேறு அடவுகள் ஆட்டக்கலைஞர்களால் மேற்கொள்ளப்
படுகின்றன.தப்பாட்டக்கலைஞர்கள் அரங்கத்தின் வலப்புறம் மூன்று பேரும்
இடப்புறம் மூன்று பேரும் நின்று தரையைத் தொட்டு
வணங்குகின்றனர். பின்னர் வலக்காலை ‘ட’
வடிவில் வளைத்து தயாராக நின்றுகொள்கின்றனர். ஒரு
குழுவைப் பார்த்தபடி மற்ற குழுவினர் நிற்கின்றனர். மைய இசைக் கலைஞர் பெரிய
மேளத்தை இசைத்து ஆட்டத்தைத் தொடக்கி வைக்கிறார் உடன் பக்க இசைக் கலைஞர்கள்
”டண்டணக்கு டணக்குணக்கு ” என்று தப்பினை அடிக்கத்தொடங்கியதும் ஒரு குழுவை நோக்கி
மற்ற குழு தப்பிசைக்கு ஏற்ப ஆடியபடி நகர்ந்து சென்று இரு குழுக்களும் சேருமிடத்திலிருந்து
அரங்கின் பின் பகுதியிலிருந்து முன் பக்கம் ஆடிக்கொண்டே நகர்கின்றனர். இதனைத் தொடர்ந்து
தப்பாட்டம் நிகழ்கிறது. அப்போது ஆட்டக் கலைஞர்களின் ஆட்ட அடவுகள்
கீழ்க்கண்டவாறு உள்ளன.
|
2.பின்னிருந்து
முன்னாக ஆடியபடி நகர்தல்
3.ஒரு குழு மற்றகுழுவினுள் நுழைந்து வெளியேறி
ஆடுதல்
4.மூன்று குழுவாக பிரிந்து ஆடுதல்
5.வட்டவடிவில் சுழன்று ஆடுதல்
6.நின்ற இடத்தில் சுழன்று ஆடுதல்
7.வலக்காலை முன்னும் இடக்காலை பின்னும் வைத்து
குதித்து ஆடுதல்
8.இடுப்பை வளைத்து வலக்கையை உயர்த்தி ஆடுதல்
9.அமர்ந்து எழுந்து ஆடுதல்
10.மூன்று குழுவாக பிரிந்து ஆடுதல்
11.இருவர் எதிரெதிராய் நின்று ஒருவர் கருவியை
மற்றவர் தட்டுதல்
12.சுழன்று ஆடுதல்
இத்தகைய அடவுகள் நடைபெறும்போது இசைக்கருவியிலிருந்து
கீழ்க்காணும் ஒலிக்குறிப்புகள் இடம்பெறுகின்றன.
டம் டம் டம் டம் டம் டம் டம்
”டண்டணக்கு டணக்குணக்கு
”டண்டணக்கு டணக்குணக்கு
”டண்டணக்கு டணக்குணக்கு
”டண்டணக்கு டணக்குணக்கு
கொரிய
மேளம்:
கொரிய நாட்டின் மேளங்களில் பக் என்ற மேளம் தொன்மையானது. பக் என்றால் கொரிய மொழியில் மேளம் என்று பொருள். இது ஒரு நாட்டுப்புற இசைக்கருவி ஆகும்.
இதில் சில வகைகள் உள்ளன. பன்சோரி( pansori),பங்மல்( pungmul), சமுல்னோரி (samulnori) என பல வகை மேளங்கள் கொரியாவில் இசைக்கப் பட்டுள்ளன. கொரிய மேளம் பற்றிய மூவேந்தர்கள் கால ஆவணங்கள் கல்லறை சுவர் ஓவியங்கள் ஆகியவற்றின்
மூலம் அறியலாம்.
Buk have been used for Korean music since the period
of the Three Kingdoms of Korea (57 BC – 668
AD) in light of mural paintings in Anak Tomb of Goguryeo (37 BC – 668 AD) and records of Book of Sui on the kingdoms,
Goguryeo and Baekje (18 BC – 660 AD). In the 3rd of Anak Tomb,
two types of buk are depicted in the paintings titled Juakdo (주악도, 奏樂圖, "painting of playing
music") and Haengryeoldo (행렬도, 行列圖, "painting of marching") such as ipgo (입고,
立鼓) and damgo (담고, 擔鼓) respectively. The ipgo is a buk
that performers beat as standing, while the damgo is a buk that drummers
strik as carrying it on their shoulder. (https://en.wikipedia.org/wiki/Buk_(drum)
The Buk were
traditionally played in the Buddhist monasteries in China, Korea and Japan
and still appears in South Korean folk music. Multiple drums (5 for Obuk, 3
for Sambuk) are placed behind and to the side so that simple rhythms can be
interpreted in manifold ways through dance.Additional information under
http://www.fabrizioperini.ch/
|
கொரிய
மேள
நடனம்(DRUM
DANCE):
அரங்கில் வலது மூலையில் மைய இசைக்கலைஞர்கள் இருவர்
அமர்ந்துள்ளனர். அரங்கின் பின் புறம் தாங்கியில் ஆறு மேளங்கள்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒருவரிடம் பெரிய
ஜங்கு மேளம் உள்ளது மற்றவரிடம் பக் மேளம் உள்ளது. இந்த இருவரும்
கீழ்க்கண்டவாறு இசைத்து ஆட்டத்தைத் தொடக்கி வைக்கின்றனர்.
டும் டும் டும்
டும்
டும் டக டக டும்
டக டக
இந்த இசையொலி தொடங்கியதும்
அரங்கின் இடப்புறமிருந்து மேளத்தை இசைத்தபடி ஆறு பெண்கள் குதித்து ஆடிக்கொண்டு வலபுறமாக
வந்து வட்ட வடிவில் ஆடுகின்றனர்.
|
1.இடமிருந்து
வலமாக ஆடியபடி நகர்தல்
2.வட்டவடிவில்
நகர்ந்து ஆடுதல்
3.இரு குழுவாகப்
பிரிந்து ஆடுதல்
4.இடக்கையை
உயர்த்தி ஆடுதல்
5.இரு
கைகளையும் உயர்த்தி ஆடுதல்
6.மூன்று
குழுவாகப் பிரிந்து ஆடுதல்
7.கைகளை
முன்னோக்கி நீட்டியபடி ஆடுதல்
8. சுழன்று
ஆடுதல்
9. வலக்காலை
முன்னும் இடக்காலை பின்னும்
வைத்து குதித்து
ஆடுதல்
10மேளத்தை
உயர்த்திப்பிடித்து ஆடுதல்
11.ஒருவர்
மேளத்தை மற்றவர் இசைத்தல்
12.உடலை
வளைத்து சுழற்றுதல்
தப்பாட்டமும்
மேள
நடனமும்:
தப்பாட்டத்திலும் மேள நடனத்திலும் தலா 12 அடவுகள் உற்று நோக்கப் பட்டு ஒப்பிடப்படுகின்றன.
ஒப்பீட்டு அட்டவணை
தப்பாட்ட அடவுகள்
|
மேள நடன அடவுகள்
|
1.இடமிருந்து வலமாக ஆடியபடி நகர்தல்
|
1.இடமிருந்து வலமாக ஆடியபடி நகர்தல்
|
2.பின்னிருந்து முன்னாக ஆடியபடி நகர்தல்
|
2.வட்டவடிவில் நகர்ந்து ஆடுதல்
|
3.ஒரு குழு மற்றகுழுவினுள் நுழைந்து வெளியேறி
ஆடுதல்
|
3.இரு குழுவாகப்
பிரிந்து ஆடுதல்
|
4.மூன்று குழுவாக பிரிந்து ஆடுதல்
|
4. மூன்று குழுவாகப் பிரிந்து ஆடுதல்
|
5.வட்டவடிவில் சுழன்று ஆடுதல்
|
5.இரு கைகளையும் உயர்த்தி ஆடுதல்
|
6.நின்ற இடத்தில் சுழன்று ஆடுதல்
|
6. சுழன்று ஆடுதல்
|
7.வலக்காலை முன்னும் இடக்காலை பின்னும் வைத்து
குதித்து ஆடுதல்
|
7.கைகளை முன்னோக்கி நீட்டியபடி ஆடுதல்
|
8.இடுப்பை வளைத்து வலக்கையை உயர்த்தி ஆடுதல்
|
இடக்கையை உயர்த்தி ஆடுதல்
|
9.அமர்ந்து எழுந்து ஆடுதல்
|
9. வலக்காலை முன்னும் இடக்காலை பின்னும் வைத்து
குதித்து
ஆடுதல்
|
10.மூன்று குழுவாக பிரிந்து ஆடுதல்
|
10மேளத்தை உயர்த்திப்பிடித்து ஆடுதல்
|
11.இருவர் எதிரெதிராய் நின்று ஒருவர் கருவியை
மற்றவர் தட்டுதல்
|
11.ஒருவர் மேளத்தை மற்றவர் இசைத்தல்
|
12.சுழன்று ஆடுதல்
|
12.உடலை வளைத்து சுழற்றுதல்
|
தமிழ் நாட்டின் தப்பாட்டத்திற்கும் கொரிய மேள நடனத்திற்கும் பல அடவுகள் ஒத்து உள்ளன. 12 அடவுகளில் 8 அடவுகள் ஒத்த அடவுகள். மீத முள்ள 4 அடவுகளில் சிறு சிறு வேற்றுமைகளே உள்ளன. தமிழக தப்பாட்ட்த்தில் ஆண்கள் தனியே ஆடுவதும, பெண்கள் தனியே ஆடுவது, ஆணும் பெண்ணும் இணைந்து ஆடுவது என மூன்று வகை உள்ளன. கொரிய நடனம் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே ஆடுவதாக அமைந்துள்ளது.
முடிவுரை:
தமிழ்நாட்டு தப்பாட்டமும் கொரிய மேள நடனமும் வெவ்வேறு பணபாட்டுச் சூழலில் நிகழ்த்தப்பட்டாலும், அவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் அமைந்திருந்தாலும் நுட்பமான ஒற்றுமைக்கூறுகள் மிகுந்துள்ளன.
தமிழக பறை இசைக்கருவி மூவேந்தர்கள் காலத்திலேயே
இசைக்கப்பட்டுள்ளது. கொரியாவிலும் மேளம் மூவேந்தர்கள் காலத்தில்
இசைக்கப்பட்டுள்ளது. தப்பு ஒரு பக்கம் மட்டும் அடிக்க இயலும்.
கொரிய மேளம் இருபுறமும் அடிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
தப்பு ஆட்டத்தில்
மைய இசைக்கலைஞர்கள் ஆணகளாகவும் ஆட்டக்கலைஞர்கள் ஆண் பெண் என இருபாலரும் உள்ளனர். கொரிய மேள நடனத்தில் மைய இசைக்கலிஞர்கள் ஆண்
பெண் இரு பாலராகவும் ஆட்டக்கலைஞர்கள் பெண்களாகவும் உள்ளனர். இருபாலர்
ஆடும் ஆட்டமும் உண்டு. ஆட்ட அடவுகளில் பல ஒற்றுமைகள் உள்ளன.
இசை ஒலிக்குறிப்புகள் வெவ்வேறாக உள்ளன.
இணையத்தில் கிடைத்த
தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர் தப்பாட்டத்தை நேரில் பார்த்துள்ளார் கொரிய மேள நடனத்தை
காணொலியில் மட்டுமே கண்டுள்ளார். கொரிய நடனத்தையும் நேரில் பார்க்கும்
வாய்ப்பு கிடைத்தால் ஆய்வு முடிவுகள் மாறக்கூடும்.
குறிப்புதவி நூல்கள்/இணையதளங்கள்:
1.பறை,
முனைவர் மு.வளர்மதி,திருமகள்
நிலையம், சென்னை,1999
2.அமைப்பியல்
நோக்கில் தமிழக நாட்டுப்புற நடன்ங்கள், முனைவர் கு.முருகேசன், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,2000
கொரிய தூதரகமும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை.இடம்: க்ரவுன் ப்ளாசா விடுதி டி.டி.கே. சாலை ,ஆழ்வார்பேட்டை ,சென்னை. 6.11.2015,
No comments:
Post a Comment