தமிழ்மணம்

target="_blank">Tamil Blogs Traffic Ranking

Wednesday, January 18, 2012

தை ஏழாவது இதழ்

தை ஏழாவது இதழில் என் கவிதை


கனவுகள் கிளைத்த மரங்கள்
--------------------------------------------------

ஆல்
அரசு
வேம்பு
புன்னை
வாகை
எல்லா மரங்களையும்
வழிபாட்டின் பெயரால்
வளர்த்து சூழல் காத்த
வம்சா வழியினர்தான்...

வளர்க்கத் தொடங்கினோம்
தென்னை
மா
பலா
முந்திரி
தேக்கு
சந்தனம்
என
கனவுகள் கிளைத்து வளர்ந்தன
பணம் காய்க்கும் மரங்கள்
எல்லாம்
"தானே" சாய்ந்து
நொறுங்கிப் போயின
கற்பனைக் கோட்டைகள்.


2 comments:

  1. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்.... தங்களது குத்தகை சிறுகதையை எனது தமிழன் வீதியில் (பொங்கல் சிறு கதையாக) மீள் பிரசுரம் செய்திருக்கின்றேன். களம் புதிது இதழில் 1996 ம் வருடம் படித்தது. மிகச் சிறப்பான வட்டார வழக்கு சிறுகதை, என்பதால் அதை எனது தளத்தில் உங்களது அனுமதியின்றி வெளியீட்டு இருக்கிறேன். மன்னிக்கவும். கூகுல் தேடு பொறி மூலம் உங்களது தளம் கிடைத்து அதில் பின்னோட்டம் இடுகிறேன். நன்றி!

    நேரம் இருப்பின் எனது தளத்தைப் பார்க்கவும்.
    http://www.tamilanveethi.blogspot.com/2012/01/blog-post_9653.html

    ReplyDelete