கலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்
தமிழ்மணம்
target="_blank">
Friday, July 8, 2011
நெய்வேலி புத்தகக்கண்காட்சி
நெய்வேலி புத்தகக்கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது முடிவானதும் அதற்கான ஏற்பாடுகள் செய்தோம். மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர்கள் இதுவரை புத்தகக்கண்காட்சி பார்த்ததில்லை. மிகவும் பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள். எதிர்பார்த்தபடி பத்தாம் வகுப்பு மாணவர்களில் 80 பேர் மட்டும் விருப்பம் தெரிவித்தனர். காலை 9 மணிக்கு விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் குழுமினர். அரசு நகரப்பேருந்தில் இடங்களை நாங்கள் மட்டுமே பிடித்துக்கொள்ள வழக்கமாகச்செல்லும் பயணிகளுக்கு சற்று அதிர்ச்சி. பாலக்கரையில் இரண்டு மாணவிகள் வந்து சேர்ன்தனர் . குறிப்பிட்ட நேரத்தில் வரமுடியாத ஒரு மாணவி பெற்றோருடன் மந்தாரக்குப்பம் வந்து எங்களோடு சேர்ந்துகொண்டார்.குறிப்பிட்டபடி பயணம் நிகழ 10.30 க்கு நகரியம் சென்று 8 சாலை நிறுத்தத்திலிருந்து நடையைக்கட்டினோம். நண்பர் கணேசன் அலுவலகத்தில் சென்று கட்டணச்சலுகைக் கோரிப்பார்த்தும் செவிமடுக்காத அதிகாரிகளைச் சபித்தபடி அனுமதிச் சீட்டுகளைப் பெற்று வந்தார். சரியாக 11 மணிக்கு முதல் ஆட்களாக உள்ளே சென்றோம் புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்கும் தொரவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் வருகவருக என வரவேற்கிறோம் என்ற அறிவிப்பில் மாணவர்கள் மக்ழ்ந்தனர். புத்தகக் கண்காட்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை முதல் நாளே மாறி மாறி வகுப்பெடுத்திருந்ததால் ஓரளவௌ மாணவர்கள் ஒத்துழைத்தனர். அறிவியல் தொழில்நுட்பத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியில் மாணவர்கள் சில அறிவியல் உண்மைகளைத் தெரிந்துகொண்டனர். அந்த அலுவலர்களிடம் பேசி அங்கு அமைத்திருந்த கோளரங்கக் காட்சிக்கு மணவர்களை அழைத்துச் சென்றோம். பலூன் வடிவ அரங்கினுள் நுழைந்து சென்றது எங்களுக்கும் புதிய அனுபவம். சிலர் நல்ல நூல்களைத் தேர்வு செய்தனர். சிலருக்கு நாங்கள் உதவினோம். மதிய உணவு அரங்கினுள் முன்பே ஏற்பாடு செய்திருந்தார் நண்பர் மொழிவேந்தன். சரியாக 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பி நடுவண் பேருந்து நிலையம் வந்து மீண்டும் நகரப்பேருந்தில் காலை போலவே இடம் பிடித்து விருத்தாசலம் வந்து மாணவர்களை தொரவளூர் பேருந்தில் ஏற்றிவிட்டோம். அவ்வப்போது தலைமை ஆசிரியர் தொலைபேசியில் கண்காணித்தார். நண்பர் ராசேந்திரன் அவர் மகனை பள்ளியில் விட்டுவிட்டு பெரியார் நகரில் எங்களோடு சேர்ந்தார் அதில் தலைமைக்கு ஒரு ஐயம் வந்தாரா? என்று விசாரிக்க, கணேசன் மூலம் உறுதிப்படுத்தினோம்.
மாணவர்கள் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாளாக அது அமைந்திருக்கும் என்பதில் எங்களுக்கு ஒரு சிறு மகிழ்ச்சி.
Subscribe to:
Post Comments (Atom)
ஐயா.
ReplyDeleteஇன்று தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_18.html
நன்றி
அறிமுகம் செய்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே
ReplyDelete